Actor Anandaraj comments after meeting with rajini
ரஜினியை கர்நாடக தூதுவன் என கூறும் பாரதிராஜா, எதற்காக ரஜினியை வைத்து படம் எடுத்தார்? என்று நடிகர் ஆனந்த்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தை இன்று போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் நடிகர் ஆனந்தராஜ் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு நடிகர் ஆனந்த்ராஜ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் ரஜினியை கர்நாடக தூதுவன் என்று கருத்து சொல்கிறார். அப்படியென்றால், எதற்காக ரஜினியை வைத்து படம் எடுத்தார்?
என்று கேள்வி எழுப்பினார்.
ரஜினிகாந்த் நடித்த படத்துக்கு கொடி பறக்குது என பாரதிராஜா தலைப்பு வைத்தது ஏன்? கொடி பறக்குது என்பதற்கு பதில் பரதேசி என்று பாரதிராஜா பெயர் வைத்திருக்கலாமே? என்றார்.
தமிழகத்தில் இருந்து ரஜினியை பிரித்துப் பார்ப்பது தவறானது என்றும், தமிழகம் மீதும், தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவராக ரஜினி உள்ளார் எனற்ர்.
கர்நாடகாவில் தற்போது இருந்து வரும் அரசியல் சூழலில் காவிரி வாரியம் அமைக்கப்படாது என்று கருதுவதாகவும் நடிகர் ஆனந்த்ராஜ் கூறினார்.
தமிழகத்தில் இருந்து ரஜினியை பிரித்து பார்ப்பது தவறானது. தமிழகம் மீதும், தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவராக ரஜினி உள்ளார்.
கர்நாடகவில் தற்போது இருந்துவரும் அரசியல்சூழலில் காவிரி வாரியம் அமைக்கப்படாது என தான் கருதுவதாகவும் நடிகர் ஆனந்த்ராஜ் கூறினார்.
