Asianet News TamilAsianet News Tamil

பாலில் கலப்படம் செய்தால் நடவடிக்கை.. இந்த ஆண்டு இறுதிக்குள் அது நடக்கும்.. அமைச்சர் மனோ தங்கராஜ்..!

பால் சேகரிப்பு வாகனங்கள், பால் டேங்கர்கள், பால் விநியோக வாகனங்கள் அனைத்திலும் GPS கருவி பொருத்தப்பட்டு தவறேதும் நிகழாமல் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். 

Action if milk is adulterated.. minister mano thangaraj
Author
First Published May 19, 2023, 10:42 AM IST

ஆவின் பால் கையாளும் திறன் 40 லட்சம் லிட்டரில் இருந்து  70 லட்சம் லிட்டராக உயர்த்தப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். 

ஆவின் நிறுவனம் சார்பில், தமிழகத்தில் உள்ள 27 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய பொது மேலாளர்கள் மற்றும் அனைத்து மாவட்ட துணை பதிவாளர்கள்  ஆலோசனை கூட்டம் சென்னையில்  நடைபெற்றது. அப்போது பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில்;- தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் பேரில் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். ஆவின் மேம்பாட்டிற்காக மற்றும் ஆவின் வளர்ச்சிக்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக உடனடியாக சரிசெய்ய கூடிய சிலவற்றை அடையாளம் கண்டு அவற்றை சரிசெய்து நிர்வாகத்தை ஒரு சிறந்த முறையில் எடுத்துச் செல்வதற்கு இந்த ஆய்வுக்கூட்டம் அமையும். முதற்கட்டமாக ஆவின் நிறுவனத்தில் சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு வருவாய்யை பெருக்கவும், வருவாய் இழப்புகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

Action if milk is adulterated.. minister mano thangaraj

தினசரி ஆவின் பால் கையாளும் திறன் 40 லட்சம் லிட்டர் ஆகும். இதை இந்த ஆண்டுக்குள் 70 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தற்போது அனைத்து பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் உகந்த சூழலை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், ஒரு விவசாயி தொழில் செய்ய வேண்டுமானால் அவர்களுக்கு முறையான கடன்வசதி, தீவனம், காப்பீடு, மருத்துவ வசதி போன்றவற்றை ஏற்படுத்தி உற்பத்தி செலவை குறைத்தும் பால் விலையை உற்பத்தியாளர்களுக்கு அதிகரித்து கொடுப்பதும் இது போன்ற நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். 

ஆவின் நிறுவனத்தில் சிறப்பான தரக்கட்டுபாடு தரமான பால் உற்பத்தி சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள் இருப்பதை பயன்படுத்தி மிகத்தரமான அதே நேரத்தில் குறைந்த விலையில் அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் வண்ணம் பால் உப பொருட்கள் தயாரித்து சந்தைபடுத்தப்படும். தமிழகத்தில் அரசிடம் உரிய அனுமதி பெறமால் பால் சேகரிப்போர் பால் பண்ணை நடத்துபவர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு பால் மற்றும் பால் உப பொருட்கள் அனைத்து தர மக்களும் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

Action if milk is adulterated.. minister mano thangaraj

பால் சேகரிப்பு வாகனங்கள், பால் டேங்கர்கள், பால் விநியோக வாகனங்கள் அனைத்திலும் GPS கருவி பொருத்தப்பட்டு தவறேதும் நிகழாமல் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பால் எடுத்துச் செல்லும் டேங்கர் லாரிகள் அனைத்தும் உள்ளேயும் வெளியேயும் தூய்மையாக வைத்து இருக்குமாறு கூறினார். மின்சாரம், எரிபொருள் மற்றும் தண்ணீரை தேவைக்கேற்ப சிக்கனமாக பயன்படுத்துமாறு கூறினார். சிறப்பாக பணிபுரிபவர்களுக்கு பரிசு கொடுக்கலாம். பொதுமக்கள் அதிகம் கூடும் சுற்றுலாத்தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள், கடற்கரை போன்ற இடங்களில் பாலகங்களை அதிகமாக்க வேண்டும் என்று கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios