மக்களவை தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல் மாநிலங்களவை உறுப்பினராகி மத்திய அமைச்சராகி விட வேண்டும் எனத் திட்டமிட்டு இருக்கிறார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.

 

அதிமுக, கூட்டணியில் சேர்ந்த, பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டது. கடந்த முறை மக்களவை தேர்தலில் தர்மபுரியில் போட்டியிட்டு வென்ற அன்புமணி, மீண்டும், தர்மபுரியில் போட்டியிட வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துள்ளாராம். தர்மபுரியில் பாமக கட்சியின் தலைவர், ஜி.கே.மணியை நிறுத்திட்டு, அன்புமணி ராஜ்ய சபா எம்.பியாக முடிவு செய்துள்ளார். 

கடந்த 2004ம் ஆண்டு ராஜ்யசபா, எம்.பி.,யாகி தான், மத்திய சுகாதார துறை அமைச்சர் ஆனார். அந்த, 'சென்டிமென்ட்' இம்முறையும்  பலிக்கும் என அவர் நம்புகிறார். அதே போல் அதிமுக., கூட்டணிக்கு வந்தால், தேமுதிகவுக்கு மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக பாஜக தரப்பில் உறுதி கொடுத்திருக்கிறார்கள்.