Asianet News TamilAsianet News Tamil

பச்சை பச்சையாக திட்டிய எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் எஸ்.பி.ஆபிஸ் முற்றுகை !! திமுக ஆவேசம் !!

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி நேற்று நடைபெற்ற பாரத் பந்தில் கலந்து கொண்ட திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜனை தாறுமாறாக திட்டடிய எஸ்.ஐ. தீமு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், எஸ்.பி. ஆபிசை முற்றுகையிடப் போவதாக  4 எம்எல்ஏக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

action against Nagarcoil si  muthumari  4 mla
Author
Nagercoil, First Published Sep 11, 2018, 10:31 PM IST

நேற்று நடைபெற்ற பாரத் பந்த்தில் தமிழகத்தில் பல இடங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளை கட்டாயப்படுத்தி கடைகளை மூடியும் வாகனங்களை திருப்பி அனுப்பியும் செய்த சம்பவங்கள் அரங்கேறின.

இதேபோன்று நாகர்கோவில் நகரத்தின் பிரதான சாலை ஒன்றில் அம்மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ் ராஜன் தலைமையில், இரண்டு திமுக எம்.எல்.ஏ.க்கள் உட்பட 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் திறந்துள்ள கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

action against Nagarcoil si  muthumari  4 mla

மேலும், சாலையில் நின்று கொண்டு வாகனங்களை மறித்து வந்தனர். அங்கு விரைந்து வந்த நாகர்கோவில் டவுன் எஸ்.ஐ. முத்துமாரி, அவர்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், சுரேஷ் ராஜன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலைய மறுத்து அங்கேயே நின்று கொண்டிருந்தனர். இது மெல்ல மெல்ல வாய்த்தகராறாக மாறியது. பின்னர், இருவருக்கும் தடித்த வார்த்தைகளால் சொற்போராக மாறிப்போனது. உச்சகட்டமாக காது கூசும் அளேவுக்கு இரு தரப்பிலும் பச்சை பச்சையாக வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. 

action against Nagarcoil si  muthumari  4 mla

இந்த சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது. எஸ்.ஐ.யின் இந்த பேச்சால் அதிர்ச்சியடைந்த திமுகவினர், முத்துமாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தி நாகர்கோவில் நகர் முழுவதும் போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர்.

action against Nagarcoil si  muthumari  4 mla

இந்நிலையில் காங்கிரஸ், தி.மு.க, இடது சாரிகள்  உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்ட அனைத்துக்கட்சி கூட்டம் நாகர்கோயிலில்  இன்று நடைபெற்றது.. அதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நேற்று நடந்த பாரத் பந்த்தில் கைதான தொண்டர்களைப் பார்வையிடச் சென்ற சுரேஷ்ராஜனை அவதூறாகப் பேசி தாக்க முற்பட்ட குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் முத்துமாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வரும் 17-ம் தேதி எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

action against Nagarcoil si  muthumari  4 mla

மேலும், சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எம்.எல்.ஏ-க்கள் சுரேஷ் ராஜன் பிரின்ஸ், ராஜேஷ்குமார், ஆஸ்டின் ஆகியோர் நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios