இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்று கூறிவந்த நிலையில் தற்போது கொரோனா சமூக பரவலாக மாறியிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரசின் தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இதுவரை 25,317 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 406 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,843 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.  வரும் நாட்களில் பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது. 

பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்  முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வர் அஸ்வத் நாராயண், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கர்நாடகாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என திட்டவட்டமாக கூறிவந்தனர். இந்நிலையில், கர்நாடக மாநித்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் மதுசுவாமி கூறியுள்ளார். 

இது தொடர்பாகசெய்திாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தும்கூர் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  8 பேரின் மருத்துவ நிலைமை ஆபத்தாக நிலையில் உள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி அவர்களின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியிருப்பதாக கவலை அடைந்துள்ளோம். நாங்கள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முயற்சித்தாலும், அதை கட்டுப்படுத்துவது மாவட்ட அதிகாரிகளுக்கு கடினமான பணியாக உள்ளது. நிலைமை ரொம்பவே கைமீறி சென்றதாக கூறியுள்ளார். ஏற்கனவே கோவாவில் சமூக பரவல் ஏற்பட்டு விட்டதாக அம்மாநில முதல்வர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.