Asianet News TamilAsianet News Tamil

ஆளுங்கட்சியில் கொ.ப.செ. பதவி வாங்கிய தனியரசு... புருடா விடும் டி.ஆர்...!! ஏ.சி.சண்முகம் ஜெயிக்க ஆசி வழங்கிய ரஜினி

லோக்சபா தேர்தலில் இந்த முறை போட்டியிட எந்த முயற்சியும் நான் எடுக்கவில்லை. ‘தேர்தலில் நிற்பதில்லை’ என தெளிவாக முடிவெடுத்துவிட்டேன். ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. எனும் பேரியக்கம் உட்கட்சி பூசலால் சேதாரத்தை சந்திக்கும்போது ரத்தக் கண்ணீர் வருகிறது.

AC Shanmugam  to Rajini gave a blessing
Author
Tamil Nadu, First Published Mar 18, 2019, 5:38 PM IST

* லோக்சபா தேர்தலில் இந்த முறை போட்டியிட எந்த முயற்சியும் நான் எடுக்கவில்லை. ‘தேர்தலில் நிற்பதில்லை’ என தெளிவாக முடிவெடுத்துவிட்டேன். ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. எனும் பேரியக்கம் உட்கட்சி பூசலால் சேதாரத்தை சந்திக்கும்போது ரத்தக் கண்ணீர் வருகிறது: கோவை எம்.பி. நாகராஜ். (கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதி மக்களில் 60% மக்களுக்கு உங்க பெயரே தெரியலை, 80% பேருக்கு உங்க முகமே தெரியலைன்னு சர்வே ரிப்போர்ட் சொல்லுதாம். ஆனா நீங்க இப்படி சீட்டு வேணாமுன்னு சொன்னதும், கட்சிக்காக ரத்தக்கண்ணீர் விட்டுட்டு இருக்குறதையும் நினைக்கிறப்ப மெய்யாலுமே முடியலண்ணே! ம்ம்ம்ம்முடியல)

* பொள்ளாச்சி குற்றவாளிகளை காப்பாற்றும் முடிவை அ.தி.மு.க. அரசு எடுக்கவில்லை. அதனால்தான் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றும் முடிவை அரசு எடுத்தது. மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம்! எதிர்கட்சிகளுக்கு போராடும் சுதந்திரம் தமிழகத்தில்தான் அதிகம் கிடைக்கிறது: எம்.எல்.ஏ. தனியரசு.(ஆளுங்கட்சியோட கொ.ப.செ. கூட உங்க கிட்ட பாடம் படிக்கணும் போலிருக்குதே! நீங்க அ.தி.மு.க.வுக்காக வரிஞ்சு கட்டி பேசுறப்பவெல்லாம் பின்னாடி என்னம்மா கேக்குது அந்த சப்தம்! அது கெடக்கட்டும், உங்க கூட்டாளிங்க கருணாஸையும், அன்சாரியையும் அம்போன்னு விட்டுட்டு இங்கிட்டு பசையா ஒட்டிட்டீங்க போலிருக்குது.)

* அ.தி.மு.க. தரப்பில் என்கிட்டே பேசினாங்க, ராஜ்யசபா எம்.பி. தர்றதா சொன்னாங்க. ஆனால் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட கூறியதால் நான் ஏற்கவில்லை: டி.ராஜேந்தர். (கரெக்ட்டுதான் தல. சர்வதேச அளவுல புகழ்பெற்ற ஒரு சின்னத்தை வெச்சிருக்கிற, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்சியின் தலைவரைப் போயி, வெறும் மாநில கட்சி ஒண்ணு தன்னோட சின்னத்துல போட்டி போட சொல்றது பேரவமானம். நீங்க மானஸ்தர்! அதான் மறுத்துட்டீங்க. சரி, உங்க கட்சியோட சின்னம் எது தல, அதுக்கு முன்னாடி உங்க கட்சி பேரு என்னது தல?)

* இந்த தேர்தலில் எனக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பிரச்சாரம் செய்யவில்லை. ஆனால்  அவரது ஆசி நிச்சயமாக எனக்கு இருக்கிறது. அது மிகப்பெரிய பலம்: ஏ.சி.சண்முகம். (உங்க பேர்லேயே ஏ.சி. இருக்கிறதாலே இப்படி பேசிப்பேசியே உங்க வி.வி.ஐ.பி. நண்பர் ரஜினியை குளிர வைக்கிறீங்க சம்முவம்! ஆசி இருக்குதுன்னு சொல்றது மூலமா, ரஜினிகாந்த் இனி கட்சி துவங்கி கஷ்டப்பட்டு உழைக்கும் சூழ்நிலையில் இல்லை, வேட்பாளர்களுக்கு ஆசி வழங்கும் முதியவர் நிலைக்கு போயிட்டாரு!ங்கிற மாதிரி பேசுறீங்களே, கோச்சுக்கமாட்டாரா?)

* தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல் அரசு வாகனங்களை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். ஆனாலும் பாதுகாப்பு கருதி என் வாகனத்தை போலீஸ் வாகனங்கள் பின் தொடர்ந்து வருகின்றன. இந்தூர் பாதுகாப்பான நகரம், எனவே அவையும் எனக்கு தேவையில்லை: சுமித்ரா மகாஜன். (வர்ரே வாவ் மேடம்! லோக்சபா சபாநாயகர் நீங்களும் இருக்கீங்க  இப்படி, ஆனா சில ‘துணை’களும் இருக்காங்க. பெங்களூருக்கு பறந்து சொந்த அரசியலுக்காக சிறைக்கைதியை சந்திப்பாங்க, அப்புறம் மத்தியரசையே திட்டு திட்டுன்னு திட்டிப் பேசுவாங்க, அப்புறம் அதே மத்தியரசை வாழ்த்திப் பேசி சீட் வாங்கிப்பாங்க. இம்புட்டையும் மத்தியரசு பணத்துலேயேதான் பண்ணுவாங்க. ஆனா அவங்களுக்கும் சீடு உண்டு! அதானுங்க மேடம் எங்க ஊரு அரசியல். ஆனா நீங்கள்ளாம் இருக்கிறதாலேதான் அந்த துணைகளுக்கும் சேர்த்து மழை பெய்யுது.)

Follow Us:
Download App:
  • android
  • ios