வேலூர்  தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் அக்கட்சியில் பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சித் தலைவர் ஏசி சண்முகம் போட்டியிடுகிறார். 

இந்நிலையில் நேற்று இரவு துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையிட்டனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துரை முருகன், தங்களுக்கு எதிராக சில கழிசடை அரசியல்வாதிகள் தான் டெல்லி காலில் விழுந்து வருமான வரித்துறையை ஏவி சோதனை நடத்த வைத்துள்ளனர் என குற்றம் சாட்டினர்.

துரை முருகன் கழிசடை அரசியல்வாதி என்று சொன்னது ஏ.சி.சண்முகத்தைத்தான் என வேலூர் ஏரியாவில் பேசப்பட்டு வருகிறது.

இது குறித்து  செய்தியாளர்களிடம் பேசிய  ஏசி சண்முகம் , துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடந்திருக்கிறது. ஆனால் இதற்கு நானும் பாஜகவும்தான் காரணம் என்று துரைமுருகன் தெரிவித்து இருக்கிறார். இது அப்பட்டமான பொய். போன மாதம் கூட கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடந்தது. அப்போ நாங்க யார் மேலேயும் எந்த பழியும் போடலையே? என தெரிவித்தார்.

எனக்கு எப்பவுமே அண்ணன் துரைமுருகன் மீது எனக்கு ரொம்ப மரியாதை. இருந்தாலும் அரசியல் நாகரிகம் கருதி நான் இதுவரைக்கும் எதுவுமே பேசவில்லை. நான் மட்டும் பேச ஆரம்பித்தால் துரைமுருகன் ஒரு மாசம் தூங்க மாட்டார். ஏன்னா.. இவர்களுக்கு எந்த நாட்டில் என்னென்ன இருக்கு என்பதை எல்லாம் நான் வெளியே சொல்ல வேண்டியதாக இருக்கும் என மி கடுமையாக பேசினார்..

பொதுவாக இந்த மாதிரி ரெய்டு எல்லாம் ஒருத்தர் போனில் பேசறதை உளவுத்துறை மூலம் அறிந்து, அதன்மூலம்தான் நடைபெறும். இது கூட தெரியாமல் அடுத்தவர் மீது அநாவசியமாக பழிபோடுவது ரொம்ப தவறு என்றார்.