சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அரசியலில் வருகை குறித்து கடந்த வருடமே அறிவித்து விட்டாலும், இதுவரை தேர்தலில் களம் இறங்குவது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி தொடங்கி போட்டியிடுவதாக ரஜினி அறிவித்து இருந்தார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

தனி கட்சி துவங்கியதும் எந்த கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பார் என்பது குறித்த கேள்விகள் இன்னும் பதில் தெரியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், திடீர் என நடிகர் ரஜினிகாந்துடன் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.ஷண்முகம் சந்தித்து பேசிவருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் தான் கடந்த சில மணி நேரங்களாக இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. ரஜினியின் அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஆலோசனை நடந்து வருகிறது. சமீபத்தில், ஏ. சி. சண்முகத்தின் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளஞர்கள்  முன் அரசியல் வெற்றிடம் குறித்து பேசி பரபரப்பை ஏற்பதினார் என்பது குறிப்பிடத்தக்கது.