Asianet News TamilAsianet News Tamil

பக்தையை 168 முறை பாலியல் வன்புணர்வு செய்த மடாதிபதி.. வழக்கிலிருந்து ஒதுங்கிய 10 நீதிபதிகள்.. அலறும் கர்நாடகா.

நீதி மன்றமே தயங்கம் அளவுக்கு ராகவேஷ்வர பாரதி ப்படி இவ்வளவு செல்வாக்கு மிக்கவராக இருந்து வருகிறார் என்பதற்கு அவரது சமூகமே காரணமாக கூறப்படுகிறது..  

Abbot who raped devotie 168 times .. 10 judges who withdrew from the case .. Screaming Karnataka.
Author
Chennai, First Published Dec 6, 2021, 1:44 PM IST

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான கர்நாடக மாநிலத்தின் மிக முக்கிய மடங்களில் ஒன்றான ராமச்சந்திர புர மடத்தைச் சேர்ந்த மடாதிபதி ராகவேஷ்வர பாரதியின் பாலியல் வழக்குகளை விசாரிக்க மாநில உயர்நீதி மன்ற நீதிபதிகள் தொடர்ந்து தயக்கம் காட்டி வருவதாகவும், இதுவரை  அவர் தொடர்புடைய வழக்குகளில் இருந்து 10 நீதிபதிகள் நழுவி இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. அந்த மடாதிபதி அந்த அளவிற்கு அரசியல் செல்வாக்கு பெற்றவராக இருந்துவருகிறார் என்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

கர்நாடகாவில் உள்ள மிக முக்கிய மடங்களில் ஒன்றாக இருப்பது ராமச்சந்திரபுர மடம். இது புகழ் வாய்ந்த கோகர்ணா கோவில், மகா பாலேஸ்வரர் கோவில்  என்று அழைக்கப்படுகிறது. ராகவேஷ்வர பாரதி சுவாமி  இதற்கு மடாதிபதியாக இருந்து வருகிறார். இவர் கர்நாடக மாநிலத்தில் உயர்ந்த பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. வழக்கம்போல இந்த மடாதிபதி மீது இரண்டு பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. பொதுவாக அனைத்து மதத் தலைவர்களின் அட்டூழியங்கள் மீது தீவிர கவனம் செலுத்தப்பட்டு வரும் இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள ராமச்சந்திரபுர மடாதிபதி ராகவேஷ்வர பாரதி மீதான வழக்குகள் அவருக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள பாலியல் வழக்குகள் இந்நேரத்திற்கு மின்னல் வேகத்தில் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடைபெறவில்லை என்பதே தற்போது எழுந்துள்ள புகார் ஆகும்.

கடந்த 2011 முதல் 2014 வரை தன்னை 168 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக மடாதிபதிக்கு எதிராக 50 வயது பெண் குற்றம் சாட்டினார். அதேபோல 15 வயதுப்பெண் இதே மதத் தலைவர் மீது பாலியல் புகார் கூறினார். ஆனால் இதுவரை இந்த வழக்குகள் விசாரித்து முடிக்கப்படவில்லை என்பதுதான் புகார். இது மட்டுமின்றி அவர் மீது ஏகப்பட்ட நில அபகரிப்பு புகார்கள்  இருந்து வருகிறது, மேலும் தனக்கு உள்ள அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பலரை அவர் மிரட்டியதாகவும் அவருக்கு எதிராக வழக்குகள் உள்ளன. ஆனால் தற்போது அவருக்கு எதிராக பலாத்கார வழக்குகளாக இருந்தாலும் சரி, நில அபகரிப்பு வழக்காக இருந்தாலும் சரி, இதுவரை எந்த வழக்குகளும் முறையாக விசாரிக்கப்படவில்லை என்பதே குற்றச்சாட்டு. அவரது வழக்குகளில் ஆஜராகும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மடாதிபதி 

Abbot who raped devotie 168 times .. 10 judges who withdrew from the case .. Screaming Karnataka.

ராகவேஷ்வர பாரதிக்கு எதிரான வழக்குகளில் இருந்து தங்களைத் தாங்களே விலக்கிக் கொள்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதுவரையில் நவம்பர் 2014 முதல் 10 கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் மடாதிபதிக்கு எதிரான பல்வேறு வழக்குகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டுள்ளனர். மேலும் சிலர் தங்கள் அமர்வில் இருந்து வழக்குகளை வேறு அமர்வுகளுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர். இப்படி 17 முறை இந்த வினோதம் நடந்துள்ளது. அதாவது ஒரு நீதிபதி ஒரு வழக்கில் இருந்து தன்னை தானே விடுவித்துக் கொள்வது சட்டத்திற்கு முரணானது. அது சந்தேகத்திற்குரியது. அப்படியென்றால் ராகவேஷ்வர பாரதி யார்..? ஏன் பல நீதிபதிகள் அவரின் வழக்குகளில் இருந்து விடுவித்துக் கொள்கின்றனர் என்ற கேள்வி கர்நாடக மக்களிடத்தில் சுற்றி சுழன்று வருகிறது.

ராகவேஷ்வர பாரதிக்கு  மடாதிபதி ஆவதற்கு முன்பாக அவரது பெயர் ஹரிஷ் ஷர்மா...  தற்போது அவர் கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டத்திலுள்ள ராமச்சந்திரபுரம் மடத்தின் தலைவராக உள்ளார். அவர் இந்து கடவுளான ராமரின் அவதாரம் என்று தன்னைத் தானே கூறிக் கொள்கிறார்,  இவர் எப்போதெல்லாம் தன் பக்தர்களுக்கு உத்தரவு போடுகிறாரோ அப்போதெல்லாம் இந்த உத்தரவு ராமரின் உத்தரவு.. இது ராமரின் விருப்பம் என்று கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார். தான் ராமரின் அவதாரம் என்றும், தனது சீடர்களை நம்ம வைத்துள்ளார். அந்த அளவிற்கு அவரது போதனைகளும் சத்சங்கங்களும் இருந்து வருகிறது. இந்தத் தகவல் கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவர்களுக்கு பாதிக்கப்பட்ட பெண் எழுதிய கடிதத்தில் இடம்பெற்றுள்ளதாகும். 

அதேபோல் ராகவேஷ்வர பாரதி கர்நாடகாவில் உள்ள மிகவும் சிறுபான்மை சமூகங்களில் ஒன்றானதும், ஆனால் மிகவும் அதிகாரம் படைத்த ஹவ்யக  பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.ராகவேஷ்வர பாரதி உள்நாட்டு பசு பாதுகாப்பு இயக்கத்தை நடத்தி வருகிறார். மேலும் அதில் எம்பிகள் அனந்த்குமார் ஹெக்டே, தேஜஸ்வி சூர்யா மற்றும் நளின் குமார்  கட்டில்  மற்றும் பாலிவுட் நடிகர் சுரேஷ் ஓபராய் உள்ளிட்ட சக்திவாய்ந்த பிரபலங்கள் சீடராக உள்ளனர். பிரதமர் ஆவதற்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில், எம்பி மற்றும் பயங்கரவாத குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா தாகூர், யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ் மற்றும் ஆர்எஸ்எஸ் கல்லட்கா பிரபாகர் ஆகியோர் அந்த இயக்கத்தில் இடம் பெற்றுள்ளவர்கள் ஆவர். 

Abbot who raped devotie 168 times .. 10 judges who withdrew from the case .. Screaming Karnataka.

ராகவேஷ்வர பாரதி மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியவர்கள் யார்:- ராகவேஷ்வர பாரதி பாலியல் பலாத்காரம் செய்ததாக இருவர் குற்றம் சாட்டியுள்ளனர். முதலில் குற்றஞ்சாட்டியவர் ஒரு பாடகி ஆவர், அவர் இந்த சாமியாரின் பக்தராக இருந்தவராவார், 2010ல் ராமச்சந்திரபுரம் மடத்தில் ராம கதா நிகழ்ச்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். ஐந்து பேர் கொண்ட குழுவில் முக்கிய பாடகியாக இருந்தார், செப்டம்பர் 2011 இல் அந்த பாடகியை அணுகிய ராகவேஷ்வர பாரதி அந்தப்பெண்ணை 2011இல் அக்டோபர் மாதம் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ராமரை பிரார்த்திக்க வேண்டும் என சில சாக்குப் போக்குகளை கூறி அந்தப் பெண்ணை தனது தனி அறைக்கு அழைத்து அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. அவரை எதிர்த்தால் தெய்வீக கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சத்தில் அந்தப் பெண் அவருக்கு ஒத்துழைத்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ராகவேஷ்வர பாரதிக்கு எதிராக அந்த பெண் தொடர்ந்த வழக்கில், ராகவேஷ்வர பாரதியை  விடுதலை செய்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு தற்போது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. ராகவேஷ்வர பாரதிக்கு எதிரான மற்றொரு கற்பழிப்பு வழக்கு தெரிவித்தவர் 15 சிறுமி ஆவார். அந்தப் புகாரில் தீர்ப்பும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல முதலாவதாக பாதிக்கப்பட்ட 50 வயது பெண் பாடகி 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமை தனக்கு எதிராக தொடர்ந்ததாகவும், இதுவரை 168 முறை எந்த மடாதிபதி தன்னை பாலியல் வன்புணர்வு செய்திருப்பதாகவும் பின்னர் 2013ல் அவருடனான அனைத்து உறவுகளையும் தான் முறித்துக் கொண்டதாகவும், ஆனால் 2014ல் மீண்டும் அவர் தன்னை மடத்துக்கு அழைத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கணவரிடம் கூறினார். பின்னர் அவர் கணவருடன் சேர்ந்து மடாதிபதி மீது புகார் கொடுக்கப் போகிறார் என்பதை அறிந்துகொண்ட மடாதிபதி அவருக்கு எதிராகவே கொலை மிரட்டல் வழக்கு ஒன்று கொடுத்தார். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Abbot who raped devotie 168 times .. 10 judges who withdrew from the case .. Screaming Karnataka.

இதைத் தொடர்ந்து தனது தாயை பாலியல் பலாத்காரம் செய்த மடாதிபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் நீதிமன்றத்தை நாடினார் அக்டோபர் 2014-ல் ராகவேஷ்வர பாரதி தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இருப்பினும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கே.என் பனீந்திரா  நாகேஸ்வரராவின் மனுவை தள்ளுபடி செய்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளவதாக அறிவித்தார். ஆனால் ஒரு மாதத்திற்கு பிறகு ராகவேஷ்வர பாரதி உயர்நீதிமன்றத்தில் மற்றொரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்த போது அதே நீதிபதி, ராகவேஷ்வர பாரதிக்கு எதிரான வழக்குகளில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். அதற்கு சில காரணங்களையும் அவர் கூறினார். அதாவது தனது மகள் பாதிக்கப்பட்ட மகளின் வகுப்புத் தோழர்கள் என்பதால் இதை தாம் விசாரிப்பது சரியாக இருக்காது என்றும், கூறினார். 

இது ஒரு புறமிருக்க பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார். தான் பாதிக்கப்பட்ட வழக்கில் நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தான் மிகுந்த வேதனை அடைவதாகவும், அந்தப் பெண் அந்த கடிதத்தில் குறிப்பிட்டார். அந்த மடாதிபதிக்கு ஆதரவானவர்கள் தன்னை மிரட்டுவதாகவும் அதில் அவர் கூறினார். இந்த அச்சுறுத்தல் காரணமாக தனது மைத்துனர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அதன் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் அவர் அதில் கூறினார். மேலும் அந்த பெண் நீதிமன்றங்கள் மீது தங்களுக்கு நம்பிக்கை போய்விட்டது எனக் கூறியிருந்தார். இதையும் மேற்கோள் காட்டிய நீதிபதி  பணீந்திரா இந்த நீதிமன்றத்தின் மீது ஒரு தரப்பினருக்கு நம்பிக்கை இல்லாததால், தான் வழக்கு தொடர்வது முறை அல்ல என கூறி வழக்கிலிருந்து விலகினார். இப்படி இந்த வழக்கில் அடுத்தடுத்து பல காரணங்களை கூறி இதுவரையில் 10 நீதிபதிகள் விளக்கி உள்ளனர். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அந்த பெண்ணின் கணவர், தயவுசெய்து இனிமேலாவது இதை விசாரியுங்கள் என வேதனையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Abbot who raped devotie 168 times .. 10 judges who withdrew from the case .. Screaming Karnataka.

நீதி மன்றமே தயங்கம் அளவுக்கு ராகவேஷ்வர பாரதி ப்படி இவ்வளவு செல்வாக்கு மிக்கவராக இருந்து வருகிறார் என்பதற்கு அவரது சமூகமே காரணமாக கூறப்படுகிறது..  அஹ்யகா என்பது சிறுபான்மையினர் சமூகமாக இருந்தாலும் நாடு முழுவதும் அதிகாரம் படைத்த சர்வ சமூகமாக இருக்கிறது. அரச குடும்ப பூசாரிகளாக அவர்களது முன்னோர்கள் இருந்து வந்துள்ளனர். அவரது சமூகம் பல அரசுத் துறைகளில் உயர்ந்த பதவிகளில் உள்ளது. பாஜக எம்பி அனந்த்குமார் ஹெக்டே, கர்நாடக சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி, கர்நாடக தொழிலாளர் அமைச்சர் சிவராம் ஹெப்பால், ஆர்எஸ்எஸ் தலைவர் கல்லட்கா பிரபாகர் பட், கர்நாடக முன்னாள் டிஜிபி டி மதியல், வாஜ்பாய் அரசில் முன்னாள் மத்திய அமைச்சர் ராமகிருஷ்ண ஹெக்டே, பத்திரிகையாளர் விஸ்வேஷ்வர் பட் உள்ளிட்டோர் முக்கியப் பிரமுகர்கள் ஆவார், இவர்கள் அனைவரும் ஹவ்யக ​​பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது தவிர, ராகவேஷ்வரா தன்னை ஹவ்யக ​​பிராமணர்களின் மிகவும் சக்திவாய்ந்த மதத் தலைவர்களில் ஒருவராக நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.

அதேபோல் பாதிக்கப்பட்ட இருவரும் ஹவ்யக ​​பிராமணர்கள் ஆவார். ஆனாலும் தங்கள் சொந்த சமூகத்திடமிருந்து எந்த ஆதரவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் "அடுத்த ஏழு தலைமுறைகளுக்கு துரதிர்ஷ்டமும் அழிவும் உங்களுக்கு ஏற்படும் என்று தங்களுக்கு ஆதரவாக வருபவர்களை ராகவேஷ்வர பாரதி சபிப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios