தமிழகத்தில் கடைசியாக 2014ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக  இருந்த போது ஆவின் பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டது.

ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மாடுகள் பராமரிப்புக்கு அதிக செலவு ஆவது மற்றும் தீவனங்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் ஆவின் பால் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்ததிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தி ரூ.32 ஆகவும், எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி ரூ.41ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து பால் விலை 4 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலை நாளை மறுநாள் முதல் அமலுக்கு வரும். இந்த விலை உயர்வால் 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.