நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆம் ஆத்மி கட்சியை தேவையில்லாமல் ஏளன படுத்தி பேசியுள்ளார், தமிழக ஆம் ஆத்மி கட்சி டாக்டர் அன்புமணியின் தற்போதய செயல்பாடுகளை பாராட்டி வருவதோடு, அவருடன் நட்புடன் அரசியல் நாகரீத்தோடு தான் உள்ளோம்.

ஆனால் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தான் ஒரு தரம் தாழ்ந்த அரசியல்வாதி என்பதை பல சந்தர்பங்களில் நிருபித்து காட்டி வருகிறார் அதையே நேற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் தேவையில்லாமல் ஆம்ஆத்மிகட்சியை ஏளனமாக பேசியுள்ளார். 

அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தாயுடன் உறவு கொள்வதற்கு சமம் என்று பேசிவிட்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தவர் தான் இந்த பெரியவர், திராவிட கட்சிகள் கூடாது, திராவிட கட்சிகள் மோசமானது என்று தேர்தல் தேதி அறிவிப்பு வரும் வரை மட்டுமே சொல்வார் திராவிட கட்சிகள் வாய்ப்பு தராமல் விரட்டினால் பிஜேயுடன் கூட்டணி அமைப்பார், மரம் வெட்டி கட்சி பாமக, ஜாதி வெறியர்கள் கட்சி பாமக என்ற நற்பெயரை தான் இவர் விதைத்து இருக்கிறார்.

தமிழக மக்கள் அவரை ஒரு சந்தர்ப்பவாத அரசியல் தலைவராக மட்டுமே பார்கிறார்கள் அதே நேரத்தில அவரது மகன் டாக்டர் அன்புமணி எப்படியாவது தமிழகத்தின் முதலமைச்சராக வரவேண்டும் என்று கருதி பல வகையான நல்ல திட்டங்கலோடு முயற்சிகளை எடுத்து வருகிறார் அனால் அவரது தந்தையின் மீதும் பாமக கட்சியின் மீதும் மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பு காரணமாக அன்புமணியின் அரசியல் எதிர்பார்ப்பு பின்னுக்கு சென்றுவிட்டது.

ஊழல், மதவாதற்கு எதிராக துவங்கப்பட்ட ஆம்ஆத்மி கட்சி என்பது கட்சி ஆரம்பிக்கப்பட்ட மறு வருடமே  70க்கு 67 உறுப்பினர்கள் வெற்றி வாகை சூடி டெல்லியில் ஆட்சி அமைத்து காட்டியவர்கள், லஞ்ச ஊழலற்ற ஆட்சி நடத்துவதோடு கல்வி, சுகாதாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மாநிலத்தை மாற்றி காட்டியிருக்கிறார். ஆகவே திண்டிவனத்தில் இருந்து கொண்டு உலகம் தெரியாமல் எதாவது உளர வேண்டாம். பாமக அரசியலை மக்கள் அறிவார்கள். 

ஆம்ஆத்மிகட்சி பற்றிய ராமதாஸ் ஏளன பேச்சிற்கு தமிழக ஆம்ஆத்மிகட்சி சார்பாக வன்மையாக கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.