Asianet News TamilAsianet News Tamil

அடுத்த 48 மணி நேரத்தில் நடக்கப் போகிற தரமான சம்பவம்..!! தமிழக மக்களே உஷார்..!!

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும், 

A quality event that is going to happen in the next 48 hours, People of Tamil Nadu are alert
Author
Chennai, First Published Sep 16, 2020, 2:21 PM IST

ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் வளிமண்டல சுழற்சியாக நீடிக்கின்றது. இதன் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், தர்மபுரி கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் சென்னை மற்றும் புதுச்சேரியில் லேசான மழையும் பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

A quality event that is going to happen in the next 48 hours, People of Tamil Nadu are alert

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்சையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசையும் ஒட்டி பதிவாகக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பந்தலூர் (நீலகிரி) 5 சென்டி மீட்டர் மழையும், கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி) தலா 4 சென்டிமீட்டர் மழையும்,  சங்கரி துர்க் (சேலம்) அவிநாசி (திருப்பூர்) தலா 3 சென்டிமீட்டர் மழையும், காவேரிப்பாக்கம், (ராணிப்பேட்டை) சிட்டம்பட்டி (மதுரை) சோலையார் (கோவை) தலா 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. செப்டம்பர் 18 ஆம் தேதி மன்னார் வளைகுடா, தென்மேற்கு தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 - 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

A quality event that is going to happen in the next 48 hours, People of Tamil Nadu are alert

செப்டம்பர் 19-ஆம் தேதி தென்மேற்கு, தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 20 வரை கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.செப்டம்பர் 20 வட கிழக்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 17-9-2020  இரவு 11:30 மணி வரை கடல் உயரம் மூன்று மீட்டர் முதல் 3.8 மீட்டர் வரை எழும்பக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios