வரும் ஏப்ரல் , மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாடு முழுவதும தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வாரம் மத்திய பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, தற்போது பிரதமர் மோடி பிறந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். 

இதையடுத்து குழஜராத் மாநிலத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 
அப்போது ஒரு பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் தொண்டர்கள் 5 பேர் ராகுல்காந்திக்கு மலர்மாலை அணிவித்தனர். 

கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் ராகுல்காந்தியின் கன்னத்தில் திடீரென முத்தம் கொடுத்தார். இதனை எதிர்பார்க்காத ராகுல்காந்தி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். அதனை தொடர்ந்து புன்முறுவலுடன் மேடையில் அமர்ந்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.