Asianet News TamilAsianet News Tamil

Breaking:தமிழகத்தில் மே-24 முதல் மே-31 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு... முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!

தமிழகத்தில் மே-24 முதல் மே-31 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கை  தமிழக அரசு அறிவித்துள்ளது.

A complete curfew in Tamil Nadu from May 25 to May 31 without any relaxation ... Chief Minister MK Stalin's order ..!
Author
Tamil Nadu, First Published May 22, 2021, 2:36 PM IST

தமிழகத்தில் மே-24 முதல் மே-31 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கை  தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 10-ம் தேதி முதல் வருகிற 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. A complete curfew in Tamil Nadu from May 25 to May 31 without any relaxation ... Chief Minister MK Stalin's order ..!

இந்த முழு ஊரடங்கானது வரும் 24-ம்தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் அடுத்த ஒரு வார காலத்துக்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. A complete curfew in Tamil Nadu from May 25 to May 31 without any relaxation ... Chief Minister MK Stalin's order ..!

இதனால் நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. வீடுகளுக்கு வந்து காய்கறிகள், பால் வழங்க உள்ளது. வாகனப் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்க அனுமதி பால் விநியோகம், குடிநீர் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி. அனைத்து கடைகளும் இன்று இரவு ஒன்பது மணி வரை செயல்பட அனுமதி அனைத்து கடைகளும் நாளை காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை செயல்பட அனுமதி. உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி உணவகங்களில் நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி.

A complete curfew in Tamil Nadu from May 25 to May 31 without any relaxation ... Chief Minister MK Stalin's order ..!

தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் இன்றும், நாளையும் மட்டும் தனியார், அரசுப் பேருந்துகள் வெளியூர் செல்ல அனுமதிக்கப்படும். செய்தி மற்றும் ஊடகங்கள் எப்போதும் போல செயல்படலாம்’’ என அறிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்

Follow Us:
Download App:
  • android
  • ios