Asianet News TamilAsianet News Tamil

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்..! அண்ணாமலை மீது 4 பிரிவில் வழக்கு.! அதிரடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசு

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரு பிரிவினரிடையே மோதலை தூண்டியதாகவும், வன்முறையை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

A case has been registered under 4 sections against Annamalai for making defamatory comments on the issue of North State workers
Author
First Published Mar 5, 2023, 11:32 AM IST

வட மாநிலத்தவர் மீது தாக்குதல்.?

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. அந்த வீடியோவில் பீகாரை சேர்ந்த 14 பேர் கழுத்தறுத்து கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதன் காரணமாக அச்சமடைந்த வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களின் உறவினர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புமாறு கேட்டுக்கொண்டனர். இதனால் ஏற்பட்ட பதற்றம் நாடு முழுவதும் பரவிய நிலையில், பாஜக நிர்வாகி ஒருவர் தவறான தகவலை பரப்பியது தெரியவந்தது.

இதனையடுத்து பொய்யான தகவலை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்திருந்தது. இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி எதிர்ப்பு என்ற பெயரில், வட மாநில மக்களை ஏளனமாகப் பேசுவதும், அவர்கள் செய்யும் தொழில்களை அவமானப்படுத்துவதுமான திமுக கலாச்சாரத்தின் விளைவுதான் இன்றைய நிலைக்குக் காரணம்.

நீலிகண்ணீர் வடிக்கும் அதிமுக.! போலியான செய்திகளை பரப்பி அசாதாரண சூழ்நிலை ஏற்படுத்தும் பாஜக- கே.எஸ்.அழகிரி

A case has been registered under 4 sections against Annamalai for making defamatory comments on the issue of North State workers

அண்ணாமலை மீது வழக்கு பதிவு

திமுக இத்தனை ஆண்டுகளாக, வட மாநில மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து செய்து வரும் இது போன்ற வெறுப்புப் பிரச்சாரத்தின் காரணமாக, தற்போது பரவி வரும் போலியான காணொளிகளைக் கூட உண்மையாக இருக்குமோ என்று எண்ணும் அளவுக்கு வட மாநிலங்களில் வசிக்கும் சகோதரர்கள் அச்சத்தில் உள்ளனர் என பதிவிட்டிருந்தார். இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் அறிக்கை, இரு பிரிவினரிடையே மோதலை தூண்டியதாகவும், வன்முறையை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இரு பிரிவினரிடையே மோதலை தூண்டியதாகவும், வன்முறையை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்ததாகவும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

திமுக ஆரம்ப காலம் முதலே..! வட மாநிலத்தவர்கள் பிரச்சனையை தீர்ப்பாரா முதல்வர்.? அண்ணாமலை அட்டாக்

Follow Us:
Download App:
  • android
  • ios