A 100 million bought by Sterlite by Ponnar
ஸ்டெர்லை போராட்டத்தில் என்ன நன்மையோ இல்லையோ ஆனால் தமிழக அரசியல்வாதிகள் பலரின் முகத்திரை தாறுமாறாக கிழிகிறது. மக்கள் விரோத ஆலைகள், நிறுவனங்களை எதிர்ப்பது போல் எதிர்த்து அவர்களிடமிருந்து பணத்தை கறந்து கொண்டு செட்டிலாகும் கரைவேட்டிகளின் முகத்தில் ஸ்டெர்லைட் விவகாரம் மூலம் செமத்தியாக கரி பூசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மத்தியமைச்சர் பொன்ராதாகிருஷ்ணனும் சமீபத்தில் தமிழக அரசியல் தலைவர் ஒருவரின் மீது கை நிறைய கரி அள்ளி பூசியிருக்கிறார்.
துத்துக்குடியில் கூட்டமொன்றில் பேசிய பொன்னார் “இந்த நாசகார ஸ்டெர்லைட் ஆலையை வேண்டாமென்று அன்றே சொன்னேன் நான். ஆரம்பத்திலேயே எங்கள் கட்சி தொடர் உண்ணாவிரதம் இருந்தது. அப்போது எங்களுக்கு பணம் தர முயன்றது ஆலை நிர்வாகம், ஆனால் நாங்கள் படியவில்லை. நான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நின்ற போதும் எனக்கு பணம் தர முயன்றார்கள். ஆனால் நானோ ‘உன் பாவ பணம் வேண்டாம்.’ என்று சொல்லிவிட்டேன்.

ஆனால் சிலரோ நூறு கோடி, ஆயிரம் கோடி என்று ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் வாங்கிவிட்டு, புது மாப்பிள்ளை மாதிரி பவனி வந்து கொண்டிருக்கிறார்கள். பணத்தையும் வாங்கிக் கட்டிக் கொண்டு, ஆலையையும் எதிர்த்து நாடகம் போடுவது என்ன ஒரு மோசமான வேலை?’ என்று பொங்கிப் பொசுங்கியிருக்கிறார்.
பொன்னார் மறைமுகமாக குறிப்பிட்டிருக்கும் அந்த ‘மாப்பிள்ளை’ இவர்தான், அவர்தான்! என்று தமிழக அரசியல்வாதிகளுக்குள் பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்கிறது.அதிலும் பெரும்பாலான நபர்கள் குறிப்பிடுவது அந்த ஒரு நபரைத்தான்! அவர் யாரென்று உங்களுக்கும் புரிந்துவிட்டால், கமுக்கமாக இருந்துவிடுங்கள்.
