Asianet News TamilAsianet News Tamil

90 சதவிகித தொண்டர்கள் சசிகலாவிற்கு எதிர்ப்பு.. OPS முடிவை எதிர்க்கும் அதிமுக மாவட்ட செயலாளர்.!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தேனி நிர்வாகிகள் சசிலாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியதற்கு புவனகிரி எம்எல்ஏ அருண்மொழித்தேவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

90 percentage of the volunteers are against Sasikala...OPS will oppose the decision Arunmozhithevan
Author
Cuddalore, First Published Mar 3, 2022, 12:49 PM IST

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தேனி நிர்வாகிகள் சசிலாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியதற்கு புவனகிரி எம்எல்ஏ அருண்மொழித்தேவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை, பெரியகுளம் லட்சுமிபுரத்தில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக தொடர் தோல்வியில் இருந்து மீள வேண்டும் என்றால், சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் சையது கான், முன்னாள் எம்.பி. பார்த்திபன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். இது அதிமுகவில் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

90 percentage of the volunteers are against Sasikala...OPS will oppose the decision Arunmozhithevan

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தேனி நிர்வாகிகள் சசிலாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியதற்கு புவனகிரி எம்எல்ஏ அருண்மொழித்தேவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சசிகலாவை கட்சியில் சேர்க்க கூடாது என 90 சதவீத அமைப்பு ரீதியான மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். நாங்களும் அப்படித்தான் அப்போது தீர்மானம் நிறைவேற்றினோம். 

90 percentage of the volunteers are against Sasikala...OPS will oppose the decision Arunmozhithevan

அப்போது தீர்மானம் நிறைவேற்றாத ஒன்றிரண்டு மாவட்டங்களில் தேனி மாவட்டமும் ஒன்று. இந்த நிலையில் தேனி மாவட்டத்தினர் இப்போது தங்கள் கருத்தை தாமதமாக சொல்லியுள்ளனர். அது மிகப் பெரும்பான்மையான தொண்டர்களின் கருத்து அல்ல. இது கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. அது தற்காலிகம் தான். மீண்டும் அதிமுக எழுச்சிபெறும் என அருண்மொழித்தேவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios