80K Mushrooms For Fair Skin Alpesh Thakor Dig At PM Modi Has Twitter ROFL

பிரதமர் மோடி கறுப்பு நிறத்தில் இருந்தார். ஆனால், தினமும் ரூ.4 லட்சம் மதிப்புள்ள இறக்குமதி காளான்களை சாப்பிடுவதால்தான் அவர் அழகாக மாறியுள்ளதாக குஜராத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ள அல்பேஷ் தாக்கூர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறக்குமதி காளான்

குஜராத்தில் நடந்த தேர்தல் பேரணியில் அவர் பேசியதாவது:-

‘‘சிலர் என்னிடம் பிரதமர் என்ன சாப்பிடுகிறார் தெரியுமா? அதனை நீங்கள் சாப்பிட முடியாது’’ எனக்கூறினர் .அவர்களிடம், அப்படி மோடி என்ன சாப்பிடுகிறார்? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், மோடி காளான் சாப்பிடுவதாக கூறினர்.

இதில் என்ன தவறு? என நான் மீண்டும் கேட்டதற்கு. பிரதமர் சாப்பிடுவது சாதாரண காளான் அல்ல. தைவானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதை சாப்பிடுகிறார். ஒரு காளானின் விலை ரூ.80 ஆயிரம் என்றனர்.

நகைச்சுவையுடன்

அதற்கு நான், உண்மையை தான் சொல்கிறீர்களா? என கேட்டேன். உடனே அவர்கள், ‘‘ஆமாம் தினமும் மோடி 5 காளான் சாப்பிடுகிறார். அவர் குஜராத் முதல்வராக இருந்த போதிலிருந்தே சாப்பிட்டு வருகிறார்’’ என பதில் கூறினர். அப்போது, அதனால் தான் கறுப்பு நிறமுடைய அவர் அழகாக மாறினாரா? என நகைச்சுவையுடன் கூறினேன்.

கருப்பு-அழகு

கடந்த 35 வருடத்திற்கு முந்தைய மோடியின் படத்தை பார்த்துள்ளேன். அப்போது கருப்பு நிறமுடைய அவர், தற்போது அழகாக மாறியுள்ளார். தினமும் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள காளான் சாப்பிடும் பிரதமரால் மாதம். ரூ.1 கோடியே 20 லட்சம் செலவாகிறது.

அவரால், சாதாரண உணவை சாப்பிட முடியாது. இது கேலிக்கூத்தானது. நாங்கள் குழந்தைகள். எங்களது குற்றச்சாட்டை கூறியுள்ளோம். தற்போது இதற்கு பிரதமர் தான் பதிலளிக்க வேண்டும்’’.

இவ்வாறு அவர் கூறினார்.