சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் கண்டிப்பாக குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

 

சேலத்தில் அதிமுக, பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அமைச்சர் கட்காரி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் கட்காரி பேசுகையில் கோதாவரியில் 1000டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை காவிரியில் கலக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ. 60 ஆயிரம் கோடியில் கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவோம். மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன் இந்த திட்டம் உடனடியாக தொடங்கப்படும் என்றார். 

தென் மாநிலங்களில் தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதே முதல் எங்களின் முதல் இலக்கு. காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழக வளர்ச்சிக்காக முதல்வர் அயராமல் பணியாற்றி வருகிறார். மேலும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பொருத்தமான கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியின் வெற்றி பெற்றால், தமிழகத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளார். 

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் முக்கியமான திட்டம். இந்த திட்டத்திற்கு நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டாலும் விவசாயிகளுடன் ஆலோசித்து நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.