Asianet News TamilAsianet News Tamil

கடைக்குள் நுழைந்து பெண்ணிடம் அத்துமீறிய 8 திமுகவினர்.?? பொங்கி எழுந்த ஓபிஎஸ்.. முதல்வருக்கு கோரிக்கை.

கடையில் இருந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளை பேசி பலாத்காரம் செய்ததாகவும், இதை தட்டி கேட்ட கடை உரிமையாளர் மற்றும் ஊழியரை திமுகவினர் கடுமையாக தாக்கி கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாகவும், இந்த சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 4 ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் படுகாயமடைந்ததாகவும், இதை அறிந்த கிராம மக்கள் திமுகவினரை மடக்கிப் பிடித்து அவர்களை உதைத்து காவல்துறையிடம் ஒப்படைத்ததாகவும்

8 DMK men who entered the shop and misbehavior the woman .. OPS who got up in a rage .. Request to the first one.
Author
Chennai, First Published Sep 15, 2021, 11:15 AM IST

தடுப்பூசி மையங்களிலும், நியாயவிலை கடைகளிலும், களப்பணியாளர் நியமனங்களிலும் காவல் துறையிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வந்த திமுகவினர் தற்போது தனியாரிடம் தங்களது நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பது கண்டனத்துக்குரியது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும்  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  தஞ்சாவூர் சூரக்கோட்டை சேர்ந்த ஆனந்தன் என்பவர் மன்னார்குடி பட்டுக்கோட்டை பிரிவு சாலையில் பேக்கரி மற்றும் டீக்கடை நடத்தி வருவதாகவும், இந்த கடைக்கு மன்னார்குடி நகர திமுக இளைஞரணி செயலாளர் சுதாகர் விவசாய தொழிலாளர் அணி நகர அமைப்பாளர் பாண்டவர், மாணவர் அணி நகர துணை செயலாளர் திரு.முருகேசன் உள்ளிட்ட 8 பேர் சென்று தகராறில் ஈடுபட்டதாகவும், 

8 DMK men who entered the shop and misbehavior the woman .. OPS who got up in a rage .. Request to the first one.

கடையில் இருந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளை பேசி பலாத்காரம் செய்ததாகவும், இதை தட்டி கேட்ட கடை உரிமையாளர் மற்றும் ஊழியரை திமுகவினர் கடுமையாக தாக்கி கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாகவும், இந்த சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 4 ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் படுகாயமடைந்ததாகவும், இதை அறிந்த கிராம மக்கள் திமுகவினரை மடக்கிப் பிடித்து அவர்களை உதைத்து காவல்துறையிடம் ஒப்படைத்ததாகவும், பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரையடுத்து, 6 திமுக பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் திமுக நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் சூரக்கோட்டை சேர்ந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு மூலகாரணமான 8  திமுக பிரமுகர் களின் 2 பேர் தப்பி ஓடி விட்டதாகவும் கிராம மக்கள் தற்காப்புத் தாக்குதல் நடத்தியதால் காயமுற்ற 6 பேர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

8 DMK men who entered the shop and misbehavior the woman .. OPS who got up in a rage .. Request to the first one.

தப்பியோடிய இருவர் இதுவரை கைது செய்யப்படவில்லை, ஆளுங்கட்சியில் உள்ளதன் காரணமாக வழக்கை நீர்த்துப் போகச் செய்து மீண்டும் தாக்குதல் நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபடுவார்கள் என்ற அச்சமும் பதட்டமும் அப்பகுதி மக்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு சூரக்கோட்டை பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட காரணமாக இருந்த அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தரவும் அப்பகுதியில் நிலவும் பதட்டத்தை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios