7 பேர் விடுதலைக்கு முட்டுக் கட்டை போடும் உள்துறை அமைச்சகம் !! விடுதலையில் சிக்கல் !!

First Published 12, Sep 2018, 9:17 AM IST
7 release home ministry try to held
Highlights

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து, தமிழக ஆளுநர் மத்திய அரசுடன் ஆலோசனை நடத்திய பின்னரே விடுதலை செய்வது குறித்து  முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேரறிவாளன் உட்பட 7 பேரையும்  விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் அனுப்புவது என  முடிவு செய்யப்பட்டது.

இத்தொடர்ந்து அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்ட்டது. இதையடுத்து, 7 பேரும் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு கருத்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐ தலைமையிலான பல்துறை கண்காணிப்பு அமைப்பு விசாரணை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் டெல்லி சிறப்பு காவல் அமைப்புகள் விசாரிக்கும் வழக்குகளில், மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தியபிறகே மாநில அரசுகள் முடிவெடுக்க முடியும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 435-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவே சரியான சட்ட நடைமுறை என்றும், ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசிடம் ஆலோசித்தே செயல்பட முடியும் என்றும் அவர் கூறினார்.இதையடுத்து 7 பேர் விடுதலையில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

loader