Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் 6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 7 காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம். தமிழக அரசு அதிரடி.

தமிழகத்தில் 6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 7 காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பணியிடமாற்றம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போது 7 காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

7 police officers including 6 IPS officers transferred in Tamil Nadu. Tamil Nadu Government Action.
Author
Chennai, First Published Aug 16, 2021, 4:11 PM IST

தமிழகத்தில் 6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 7 காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பணியிடமாற்றம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போது 7 காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சென்னை ரயில்வே காவல்துறையின் எஸ்.பி-யாக இருந்த தீபா சத்யன் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி-யாகவும், 

7 police officers including 6 IPS officers transferred in Tamil Nadu. Tamil Nadu Government Action.

ராணிப்பேட்டை எஸ்.பி தேஷ்முக் சேகர் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 6வது பட்டாலியனின் கமாண்டெண்ட் ஆகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல ராமநாதபுரம் கடலோரக் காவல் குழுமத்தின் எஸ்.பி-யாக இருந்த ஜெயந்தி சேலம் மண்டல அமலாக்கத்துறையின் எஸ்.பி-யாகவும், தமிழ்நாடு சிறப்புக் காவல்படையின் 6வது பட்டாலியன் கமாண்டண்ட் ஆக இருந்த இலங்கோ சென்னை ரயில்பே எஸ்.பி-யாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

7 police officers including 6 IPS officers transferred in Tamil Nadu. Tamil Nadu Government Action.

மேலும், சேலம் மண்டல அமலாக்கத்துறையின் எஸ்.பி-யாக இருந்த மகேஷ் குமார் நில மோசடி தடுப்பு சிறப்புப் பிரிவின் எஸ்.பி-யாகவும், சென்னை பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு 2-ன் ஐ.ஜி-யாக இருந்த கல்பனா நாயக் சென்னை ரயில்வே ஐ.ஜி-யாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல விடுப்பில் இருந்து மீண்டும் பணியில் சேர்ந்த ஐ.ஜி அபின் தினேஷ் மொடாக் சென்னை பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios