கிறிஸ்தவ மதப்பிரச்சாரகர் பிரவீன் இந்தியாவில் 699 கிராமங்களின் குடிநீர் தேவையை போக்கி அதன் மூலம் மனதை மாற்றி ஆயிரக்கணக்கான மக்களை மதம் மாற்றி இந்து- இந்தியாவுக்கு எதிரான நூற்றாண்டுகால பண்பாடு, வழிபாட்டு முறைகளை சிதைத்து வருகிறார். அவரை கிறிஸ்தவ நாடுகள் கொண்டாடி வருகின்றன. 

கிறிஸ்தவ மத போதகரான பிரவீன் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பகிர்வதில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார்.  இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களை ஊக்குவிக்கவும், இயேசுவின் புதிய சீடர்களை உருவாக்குவதற்கும் திட்டமிட்டு வருகிறார். 

இதுகுறித்து அவர், "நாம் துளையிடும் ஒவ்வொரு கிணறும் இயேசுவின் அன்பால் அடைய ஒரு முழு கிராமத்தையும் திறக்கிறது. சராசரியாக, ஒவ்வொரு கிராமமும் இரண்டாயிரம் பேர். ஆனால் நாங்கள் இப்போது ஒரு மாதத்திற்கு 12 கிணறுகளை தோண்டுகிறோம். இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் அதிக அளவில் தோண்டியுள்ளோம். 1.3 பில்லியன் பரப்பளவில் உள்ள இந்த பரந்த இந்திய நாட்டில் இயேசுவின் நாமத்தை போதிக்க பல சந்தர்ப்பங்கள் உள்ளன. இந்த நாட்டின் கடைக்கோடி பகுதிகள், ஏழ்மையான இடங்களுக்குச் சென்று, புதிய கிராமங்களைக் கண்டுபிடித்து, நற்செய்தியைப் பகிர்ந்து கொள்கிறோம். 

இந்தியாவில் மிகப்பெரிய தேவைகள் இன்னும் அப்படியே உள்ளது. சுத்தமான நீர் மற்றும் நற்செய்தியுடன் அதிகமான மக்களைச் சென்றடைய எங்களுக்கு அதிக செலவாகிறது. நம்பமுடியாத அளவு புதிய மக்கள் ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவை அறிந்துகொள்கிறார்கள். நன்கொடையாளர்கள், சிலர் ஒரு முதலீட்டைச் செய்கிறார்கள். இந்தியாவின் இதயத்தில் இயேசு கிறிஸ்துவை மட்டும் வணங்கி சேவை செய்யும் ஒரு தேசமாக மாற்றுவதற்கான எனது வாழ்க்கைப் பணித் தொடரும்’’எனத் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த சேவையை பாராட்டி கிறிஸ்தவ நாடுகள் நன்கொடைகளை வாரி வழங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய மக்களின் வறுமையை, அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்து இதுபோன்ற மதமாற்றம் நடைபெற்று வருகிறது. இந்த மதமாற்றம் தொடர்ந்தால் இந்தியாவில் கலாச்சாரமும், பண்பாடும், இந்துக்களின் வரலாறும் சிதைக்கப்படும். எழுச்சி கொள்வார்களா இந்துக்கள்..? நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு..?  இவர்  மீது புகார் கொடுக்கப்பட்டு கைதான பிறகும் அதே பணியை மீண்டும் தொடங்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.