டெல்லி சட்டமன்றத்தில் என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிரான தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த தீர்மானம் தொடர்பான விவாதத்தின்போது, டெல்லி சட்டமன்ற உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மொத்தமுள்ள 70 எம் எல் ஏக்களில் 61 எம்.எல்.ஏக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லையென்பது தெரியவந்ததுள்ளது.

T.Balamurukan

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டெல்லி சட்டமன்றத்தில் என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த தீர்மானம் தொடர்பான விவாதத்தின்போது, டெல்லி சட்டமன்ற உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மொத்தமுள்ள 70 எம் எல் ஏக்களில் 61 எம்.எல்.ஏக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லையென்பது தெரியவந்ததுள்ளது.

முஸ்லிம்களை என்.பி.ஆர்., என்.ஆர்.சி. குறி வைத்துள்ளதாக கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றது.டெல்லி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், 'என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. ஆகியவை அச்சமான சூழலை உருவாக்கியுள்ளது. தாங்கள் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்க முடியாமல் போனால் தாங்கள் அகதிகள் முகாமுக்கு அனுப்பப்படுவோம் என மக்கள் அச்சப்படுகின்றனர். நாட்டில் 90 சதவீதம்பேரிடம் மத்திய அரசு கேட்கும் சான்றிதழ்கள் கிடையாது.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.