Asianet News TamilAsianet News Tamil

6 லட்சம் கோவிஷில்டு கொரோனா தடுப்பூசி மருந்து சென்னை வருகை.. மோடி உத்தரவால் அதிரடி சரவெடி.

 பிரதமா் மோடி உத்தரவின் பேரில் புனேவில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து 6 லட்சம் டோஸ் (60 ஆயிரம் பாட்டில்கள்) கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
 

6 lakh Govish shielded corona vaccine arrives in Chennai .. Central Government Action.
Author
Chennai, First Published Apr 20, 2021, 5:06 PM IST

புனேவில் இருந்து சென்னைக்கு 6 லட்சம் கோவிட்ஷில்டு கொரோனா தடுப்பூசி மருந்து இன்று வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா 2வது அலை அதிகமாக பாதிப்பதால் மத்திய மருந்து தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இதையடுத்து பிரதமா் மோடி உத்தரவின் பேரில் புனேவில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து 6 லட்சம் டோஸ் (60 ஆயிரம் பாட்டில்கள்) கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. 

6 lakh Govish shielded corona vaccine arrives in Chennai .. Central Government Action.

6 லட்சம் டோஸ்  கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் அடங்கிய 60 ஆயிரம் மருந்து பாட்டில்களை 50 பாா்சல்களாக ஏற்றிக்கொண்டு விமானம் புனேவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. இந்த விமானம் மாலை 3.50 மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய விமானம் முன்னதாகவே மாலை 3.30  மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சோ்ந்தது.விமானத்தில் இருந்து மருந்து பாா்சல்களை இறக்கி கண்டெய்னா் வாகனம் மூலம் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். மருத்துவ தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

6 lakh Govish shielded corona vaccine arrives in Chennai .. Central Government Action.

தமிழகத்திற்கு மத்திய மருந்து தொகுப்பில் இருந்து  இதுவரை

கோவிஷீல்டு - 47,03,590 டோஸ் 

கோவேக்சின் - 8,82,130 டோஸ் 

இன்று வருகை: 

கோவிஷீல்டு- 6 லட்சம் டோஸ்கள் 

தமிழகத்திற்கு இதுவரை  மொத்தம்

கோவிஷீல்டு - 53,03,590 டோஸ்

கோவேக்சின்- 8,82,130 டோஸ் 

மொத்தம்  :  61,85,720 டோஸ்கள் மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்பட்டு உள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios