இராஜபாளையத்தில் அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்டம் சார்பில்  எம்.ஜி.ஆர் 104 வது பிறந்த நாள் பொதுக் கூட்டம்  நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட செயலாளரும் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது. கொரோனா தொற்றுக் காலத்தில் ஆன்லைனில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் ஆல் பாஸ் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து. மாணவர்களில் உள்ளம் கவர்ந்த முதல்வர்  என பெயரெடுத்திருக்கிறார். 

தேர்தல் முடிந்தவுடன் அடுத்த தைப்பொங்கலுக்கு அனைவருக்கும் 5,000 ரூபாய்  கொடுக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைப்பேன். ஸ்டாலின் வீடு வேளச்சேரியில் உள்ளது, அதற்கு இரண்டு பாலம் அண்ணா, அறிவாலயத்திற்கு 2 பாலம் கோபாலபுரத்தில் 2 பாலம், கனிமொழி வீடு  செல்லும் வழியில் இரண்டு பாலம் என  மொத்தம் எட்டு பாலங்கள் கட்டப்பட்டு உள்ளது. அதை இடித்துவிட்டு நாங்கள் கட்டுவோம்.  

கலைஞர் கருணாநிதி இறந்ததற்கு மனிதாபிமான அடிப்படையில் ஸ்டாலின் அப்பாவிற்கு இடம் கொடுத்தோம். உயர்நீதிமன்றம் கூறியது, நாங்கள் நினைத்தால் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்து  இடம் கிடைக்காமல் தடுத்திருக்க முடியும். ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை. பெருந்தலைவர் காமராஜருக்கு ஒரு நீதி. திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒரு நீதியா. கலைஞர் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு அவர் வீட்டிலேயே இருந்தார். அவரின் இறப்பில் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. அவர் இறப்பில் ஒரு மர்மம் இருக்கிறது போல் தெரிகிறது. 

 

அதை நாங்கள்  மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வரிடம்  சொல்லி அந்த மர்மத்தை வெளிகொண்டு வருவோம்.கலைஞர் கருணாநிதி நினைத்திருந்தால் ஸ்டாலினை தலைவராக கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அவர் செயல் தலைவராக வைத்திருந்தார்.ஆகயால் தான் ஸ்டாலின் கலைஞருக்கு அறுவை சிகிச்சை செய்து கலைஞரை வீட்டிலேயே படுக்க வைத்து விட்டார். தலைவராக வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டினார். மேலும், தமிழகமெங்கும் அலை வீசுகிறது. இரட்டை இலை அலை வீசுகிறது என அமைச்சர் பேசினார்.