வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பிரச்சார வியூகத்தை பிரசாந்த் கிஷோர் அமைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டுமானால் பிரசாந்த் வகுத்துக் கொடுத்துள்ள 5 கட்டளைகள் என சமூகவலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அதன்படி, 

1. எந்தக் கூட்டத்திலும் நான் கருணாநிதி மகன் எனச் சொல்லக் கூடாது.
2. பழமொழிகள் தவிர்க்க வேண்டும்.
3 .பெண்கள் தொடர்பான குற்றம் குறித்து திமுக பேசக்கூடாது. 
4. எடப்பாடி பழனிசாமி பதவி விலகச் சொல்லி தவறியும் பேசக்கூடாது. 
5.’ஆக’என்பதை தவிர்த்தாலே திமுக 100 தொகுதிகளை கைப்பற்றும் என 5 கட்டளைகளை அவர் பதிவிட்டுள்ளார். 

இது பிரசாந்த் கிஷோர் போட்டுக்கொடுத்த கட்டளைகள் அல்ல. எதிர்கட்சியினர் பிரசாந்த் கிஷோர் போட்டுக் கொடுத்த 5 கட்டளைகள் என பகிர்ந்து வருகின்றனர். இந்த போஸ்டு கார்டை எதிர்கட்சிகளை சேர்ந்த ஐடி பிரிவினர் பகிர்ந்து வருகின்றனர்.