சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய  5 மாநில சட்டசபைக்கு தேர்தல் நடந்து முடிவடைந்துள்ள நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதில் யார் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதே நேரத்தில் கருத்துக் கணிப்புகளால் கலங்கிப் போயுள்ள பாஜக பெரும் பதற்றத்தில்  உள்ளது.

சட்டீஸ்கர்மாநிலத்தில்மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்குகடந்தமாதம் 12, 20ம்தேதிகளில்இருகட்டங்களாகவாக்குப்பதிவுநடைபெற்றது. இதில், 74 சதவீதம்வாக்குகள்பதிவாகின. இந்தமாநிலத்தில்ஆளும்பாஜ, காங்கிரஸ்வேட்பாளர்கள்உள்படமொத்தம் 1,269 வேட்பாளர்கள்களத்தில்உள்ளனர்.

மத்தியப்பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்குகடந்தமாதம் 28ம்தேதிஒரேகட்டமாகநடைபெற்றதேர்தலில், 75 சதவீதவாக்குகள்பதிவாகின. மொத்தம் 2,899 வேட்பாளர்கள்களத்தில்உள்ளனர். மத்தியபிரதேசம், சட்டீஸ்கர்ஆகியமாநிலங்களில்கடந்த 2003ம்ஆண்டிலிருந்துபாஜதொடர்ந்துஆட்சியைநடத்திவருகிறது

இப்போது 4வதுமுறையாகஆட்சியைதக்கவைக்கபாஜகதீவிரபிரசாரம்மேற்கொண்டது. எனினும், இவ்விருமாநிலங்களிலும்பாஜவுக்கும்காங்கிரசுக்கும்இடையேகடும்போட்டிஇருக்கவாய்ப்புள்ளதாகஓட்டுப்பதிவுக்குபிந்தையகருத்துக்கணிப்புகள்தெரிவிக்கின்றன.

பாஜகஆட்சிநடைபெறும்மற்றொருமாநிலமானராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்குகடந்த 7ம்தேதிஒரேகட்டமாகவாக்குப்பதிவுநடைபெற்றது. இதில் 74 சதவீதவாக்குகள்பதிவாகின. மாநிலத்தில்மொத்தம் 2,274 வேட்பாளர்கள்களத்தில்உள்ளனர். இங்குகாங்கிரசுக்குவெற்றிவாய்ப்புஉள்ளதாககருத்துக்கணிப்புகள்கூறுகின்றன.

வடகிழக்குமாநிலங்களில்காங்கிரஸ்ஆட்சியில்உள்ளஒரேமாநிலமானமிசோரமில், 40 தொகுதிகளுக்குகடந்தமாதம் 28ம்தேதிவாக்குப்பதிவுநடைபெற்றது. இதில் 80 சதவீதவாக்குகள்பதிவாகின. இங்கு 209 வேட்பாளர்கள்களத்தில்உள்ளனர்

இம்மாநிலத்தில்முக்கியஎதிர்க்கட்சியானமிசோதேசியமுன்னணிக்குவெற்றிவாய்ப்புஉள்ளதாககருத்துக்கணிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 119 தொகுதிகளைக்கொண்டதெலங்கானாவில், கடந்த 7ம்தேதிஒரேகட்டமாகவாக்குப்பதிவுநடைபெற்றது. இதில் 67 சதவீதவாக்குகள்பதிவாகின. தேர்தல்களத்தில் 1,821 வேட்பாளர்கள்உள்ளனர். ஆளும்தெலங்கானாராஷ்டிரசமிதி (டிஆர்எஸ்), பாஜகஆகியகட்சிகள்தனித்தும், காங்கிரஸ் - தெலுங்குதேசம் - தெலங்கானாஜனசமிதி - இந்தியகம்யூனிஸ்ட்ஆகியகட்சிகள்கூட்டணியாகவும்தேர்தல்களத்தில்உள்ளன. இருந்தும்டிஆர்எஸ்கட்சிமீண்டும்ஆட்சியைதக்கவைக்கவாய்ப்புள்ளதாககருத்துக்கணிப்புகள்தெரிவிக்கின்றன.



இந்நிலையில், இன்று காலை 8 மணிக்குவாக்குஎண்ணிக்கைதொடங்கவுள்ளது. இதையொட்டி, 5 மாநிலங்களிலும்வாக்குஎண்ணும்மையங்களில்பலத்தபாதுகாப்புஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.

தேர்தல்முடிவுகள்உடனுக்குடன்தெரிந்துகொள்ளவசதியாகதேர்தல்ஆணையஇணையதளத்தில்அவ்வப்போதுமுடிவுகள்பதிவேற்றம்செய்யப்படும்என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. செய்திசேனல்களும்நேரடிஒளிப்பரப்பில்நாளைகாலை 6 மணிமுதலேகளநிலவரத்தைவெளியிடஉள்ளன.

காலை 11 மணிக்குமுன்னணிநிலவரம்முழுமையாகதெரிந்துவிடும். மாலை 3 மணிக்குள்எந்தமாநிலத்தில்எந்தகட்சிஆட்சியைபிடிக்கும்என்றுதெரியவரும்

மொத்தத்தில், 5 மாநிலங்களிலும் 678 தொகுதிகளுக்கானஎம்எல்ஏக்கள்தேர்வுசெய்யப்படவுள்ளதால், அவர்கள்யார்யார்என்றவிபரம்மாலைக்குள்தெரிந்துவிடும்என்பதால், இன்றுஅதற்கானகவுன்ட்டவுன்தொடங்கியுள்ளது.

பாஜக சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியபிரதேசம்ஆகியமாநிலங்களில்மீண்டும்ஆட்சியைதக்கவைக்குமா, தெலங்கானாவில்டிஆர்எஸ்கட்சி, மிசோரமில்காங்கிரஸ்கட்சிஆகியவைமீண்டும்ஆட்சியைகைப்பற்றுமாஎன்றபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

அதே நேரத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக சில மாநிலங்களை இழக்கும் என தெரிய வந்துள்ளதால் அக்கட்சி பெரும் பதற்றத்தில் உள்ளது.