வடகிழக்கு மாநிலமான மிசோரம், சத்தீஸ்கர் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகளில் ராஜஸ்தானில் காங்கிரஸ் உறுதியாக ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டது. ம.பியில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது என்றும் வாக்குக் கணிப்புகள் தெரிவித்தன.

ராஜஸ்தான் மக்கள் மீது உள்ள அதீத நம்பிக்கையில் அம்மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகம் நேற்றே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கொண்டாட்டத்துக்குத் தயாராக இருக்கிறது.

மக்களின் தீர்ப்பு என்ன என்பது இன்று முற்பகல் வாக்கில் தெரியத் தொடங்கும். பிற்பகலில் தெளிவாகிவிடும். இந்த ஐந்து மாநில மக்களின் தீர்ப்பை அறிய ஒட்டுமொத்த இந்திய மக்களுமே ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் வாக்குகள் எண்ணும் பணி தற்போது தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.