Asianet News TamilAsianet News Tamil

தி.மு.க கூட்டணியில் வைகோ கேட்கும் அந்த 4 தொகுதிகள்!

தி.மு.க கூட்டணியில் 4 தொகுதிகள் கட்டாயம் வேண்டும் என்றும் அதுவும் தான் கேட்கும் நான்கு தொகுதிகளும் வேண்டும் என்றும் வைகோ நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

4 seat that ask for Vaiko in DMK coalition!
Author
Chennai, First Published Oct 20, 2018, 9:11 AM IST

தி.மு.க கூட்டணியில் 4 தொகுதிகள் கட்டாயம் வேண்டும் என்றும் அதுவும் தான் கேட்கும் நான்கு தொகுதிகளும் வேண்டும் என்றும் வைகோ நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே தொகுதிப் பங்கீட்டை முடித்து பிரச்சாரத்தையும், தேர்தல் பணிகளையும் தொடங்க வேண்டும் என்பது தான் ஸ்டாலினின் தற்போதைய திட்டம். இதற்காக கடந்த 15 நாட்களாகவே அண்ணா அறிவாலயம் மிகவும் பிசியாக இயங்கி வருகிறது. ஏதோ ஒரு காரணத்தைகூறி கூட்டணி கட்சித்தலைவர்கள் அனைவரும் ஸ்டாலினை சந்தித்து பேசிவிட்டு வந்துவிட்டனர்.

 4 seat that ask for Vaiko in DMK coalition!

காரணம் என்ன சொல்லப்பட்டாலும் ஸ்டாலினுடனான தலைவர்கள் சந்திப்பு முழுக்க முழுக்க நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்புடையது தான் என்கிறார்கள். அந்த வகையில் வைகோ தனது ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் வேண்டும் என்று ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க அமைத்த மெகா கூட்டணியில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதையும் வைகோ அப்போது சுட்டிக்காட்டியுள்ளார். 4 seat that ask for Vaiko in DMK coalition!

போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க வெற்றி பெற்றதையும், நாற்பது தொகுதியையும் தி.மு.க கூட்டணி கைப்பற்றியதை பற்றியும் வைகோ ஸ்டாலினிடம் விரிவாக பேசியுள்ளார். மேலும் கடந்த முறை பா.ஜ.க கூட்டணியில் 7 இடங்கள் தனதுகட்சிக்கு ஒதுக்கப்பட்டதையும் வைகோ ஸ்டாலினிடம் எடுத்துரைத்துள்ளார். எனவே 4 தொகுதிகளுக்கு குறைவில்லாமல் ஒதுக்கினால் தான் நன்றாக இருக்கும் என்று வைகோ கூறியுள்ளார்.

 4 seat that ask for Vaiko in DMK coalition!

அதுமட்டும் இல்லாமல் விருதுநகர், தேனி, ஈரோடு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு தொகுதிகளை குறிப்பிட்டும் வைகோ தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் விருதுநகர் தொகுதியை காங்கிரஸ் கட்சி விட்டுக் கொடுக்காது. இதே போல் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட தி.மு.க விரும்பும். எனவே இந்த விவகாரத்தில் ஸ்டாலின் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது தான் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios