Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் இருந்து இ-பாஸ் வாங்காமல் சென்ற 4 பேர்... பரிதாபத்திற்கு ஆளான சம்பவம்..!

சென்னையில் இருந்து திருப்பூருக்கு இ-பாஸ் பெறாமல் வாடகை காரில் வந்த 4 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

4 people went to Chennai without buying e-pass
Author
Tamil Nadu, First Published Jun 8, 2020, 3:23 PM IST

சென்னையில் இருந்து திருப்பூருக்கு இ-பாஸ் பெறாமல் வாடகை காரில் வந்த 4 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தற்போது 5-வது கட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது.

4 people went to Chennai without buying e-pass

அதன்படி பல்வேறு மாவட்டங்களை இணைத்து மண்டலங்களாக அறிவித்து பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்ட போதிலும், சென்னை உள்ளிட்ட கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு செல்வதற்கும், அங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 9 மாத பெண் குழந்தை, 19 வயது இளம்பெண், 16 வயது சிறுவன், 25 வயது இளம்பெண் ஆகிய 4 பேர் சென்னையில் இருந்து இ-பாஸ் பெறாமல் திருப்பூருக்கு வாடகை காரில் வந்துள்ளனர்.4 people went to Chennai without buying e-pass

இது குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் குணசேகரன் எம்.எல்.ஏ.விற்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அந்த 4 பேரும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தற்போது அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios