Asianet News TamilAsianet News Tamil

4 தொகுதி இடைத்தேர்தல்... விரலில் மை வைக்கும் குழப்பத்திற்கு வழி கண்ட தேர்தல் ஆணையம்..!

4 தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு நடு விரலில் மை வைக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல் தெரிவித்துள்ளார்.

4 By-election...middle finger
Author
Tamil Nadu, First Published Apr 13, 2019, 5:10 PM IST

4 தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு நடு விரலில் மை வைக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல் தெரிவித்துள்ளார்.

2019 மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி முதற்கட்ட தேர்தல் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. தமிழக சட்டப்பேரவை 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இந்த தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது. இந்த இரு தேர்தலும் ஒரே நேரத்தில் நடப்பதால் எந்த விரலில் மை வைக்கப்படும் என்பது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார். 4 By-election...middle finger

இது தொடர்பாக பேட்டியளித்த தேர்தல் அதிகாரி மக்களவைத் தேர்தலுடன், 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஒரே விரலில், அதாவது ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும். மேலும், அடுத்த மாதம் 19-ம் தேதி திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும்போது, ஏற்கனவே வைத்த மை அழியாது என்பதால் வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும் என தகவல் தெரிவித்தார். 4 By-election...middle finger

தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினரால் இதுவரை 170 கோடியே 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios