அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் யாருக்கும் அடிமையாக இல்லை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

தேர்தல் முடிந்த கையொடு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்தார். தேவஸ்தான அதிகாரிகள் ராஜேந்திர பாலாஜிக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் மீண்டும் 3வது முறையாக அதிமுக அரசு பதவியேற்கும். முதல்வராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் பதவியேற்பார். 

கொரோனா பரவலை  தடுக்க தமிழக அரசு அனைத்து  நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் யாருக்கும் அடிமையாக இல்லை. தேர்தல் நேரத்தில் எவ்வாறு சுயமாக சிந்தித்து தொண்டர்களை நம்பி செயல்படக்கூடிய மாபெரும் இயக்கம் அதிமுக என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.