Asianet News TamilAsianet News Tamil

ஜம்மு- காஷ்மீரில் மத்திய அரசு போட்ட பயங்கர பிளான்....!! உச்சகட்ட கலக்கத்தில் பாகிஸ்தான் பிரிவினைவாதிகள்...!!

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் காஷ்மீர் மக்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிரான வெறுப்பைத்தூண்டி கிளர்ச்சி செய்து பிரிவினையை ஏற்படுத்தலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்துவரும் பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள் மத்தயில் கலக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. 
 
30 central minister going to start canvassing and create awareness about central government welfare scheme's among jam-mu and Kashmir people's
Author
Delhi, First Published Jan 18, 2020, 1:59 PM IST

மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறி விளக்க வேண்டுமென ஜம்மு- காஷ்மீர் செல்லும் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு லடாக்- ஜம்மு காஷ்மீர் என இரண்டு மாகாணங்களாக  அறிவிக்கப்பட்டுள்ளது .  சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்ட போது நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது , ஆனால்  காஷ்மீர் வளர்ச்சிப்பாதையில் பயணிக்க போகிறது ,  மற்ற மாநிலங்களை காட்டிலும்  ஒரு படி காஷ்மீரும் காஷ்மீர் மக்களும் அதிக வளர்ச்சியடையப்  போகிறார்கள்  எனவும் அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் , பிரதமர் மோடியும் அறிவித்தனர்.

30 central minister going to start canvassing and create awareness about central government welfare scheme's among jam-mu and Kashmir people's

எனவே  தற்போது காஷ்மீர் மற்றும் லடாக்கின்  உட்கட்டமைப்பு வசதிக்காகவும் , அங்குள்ள  இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காகவும்  மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி அங்கு வளர்ச்சிப் பணிகளில்  அதிரடி காட்டி வருகிறது . இந்நிலையில் காஷ்மீர் மக்களைச் சந்தித்து மத்திய அரசு எடுத்துவரும்  நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிபணிகள்  குறித்து எடுத்துக்கூற  சுமார் மத்திய அமைச்சர்கள் 36 பேர் ஜம்மு காஷ்மீரில்  முகாமிட்டு பிரச்சாரம் செய்ய உள்ளனர்.   இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது . இந்நிலையில்  காஷ்மீர் செல்லும் அமைச்சர்களின் மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார் அப்போது பேசிய அவர், காஷ்மீர் செல்லும் அமைச்சர்கள் அனைவரும் ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் கலந்துரையாட வேண்டும் ,  அப்போது அங்கு அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கிச் சொல்லவேண்டும் . 

30 central minister going to start canvassing and create awareness about central government welfare scheme's among jam-mu and Kashmir people's

அங்கு செல்லும் அமைச்சர்கள் நகர்ப்புறங்களுக்கு மட்டும் சென்று திரும்பி விடாமல் ,  உள்கிராமப்புறங்களுக்கு சென்று மக்களை சந்திக்க வேண்டுமென்றார் .  ஜனவரி 18ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை சுமார் ஐந்து நாட்கள் மத்திய அமைச்சர்கள் அங்கு தங்க உள்ளனர்.  முன்னதாக  மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஜனவரி 19ஆம் தேதி ரியாஸின் மாவட்டத்திற்கு செல்கிறார் ,  அதே நாளில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஸ்ரீநகர் செல்கிறார் ,  உள்துறை இணை அமைச்சர்  ஜி. கிஷன் ரெட்டி ஜனவரி 22ஆம் தேதி கந்தர்பால் செல்கிறார் , 

30 central minister going to start canvassing and create awareness about central government welfare scheme's among jam-mu and Kashmir people's 

மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஜனவரி 24ஆம் தேதி பாரமுல்லா மாவட்டம் செல்கிறார் ,  இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு 21ஆம் தேதி ஜம்முவில் உள்ள சுசேத்கருக்கும் , மத்திய இணை அமைச்சர் வி கே சிங் 20ஆம் தேதி உத்தம்பூருக்கும் செல்கிறார்கள்.  இவர்களுடன் ஆர்கே சிங் , ஸ்ரீபாத் நாயக், அனுராக் தாக்குர் ,  கிரிராஜ் சிங் ,  ரமேஷ் போக்ரியால் ,  பிரகலாத் ஜோஷி ,  ஜிதேந்திர சிங் , உள்ளிட்ட அமைச்சர்களும் ஜம்மு காஷ்மீர் செல்லும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .30 central minister going to start canvassing and create awareness about central government welfare scheme's among jam-mu and Kashmir people's

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் காஷ்மீர் மக்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிரான வெறுப்பைத்தூண்டி கிளர்ச்சி செய்து பிரிவினையை ஏற்படுத்தலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்துவரும் பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள் மத்தயில் கலக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. 
 
Follow Us:
Download App:
  • android
  • ios