முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ்  ஆகியோர் தனித்தனியாக  அவர்களது ஆதரவாளர்களுடன்  ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் சென்னையில் தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணிகள் இணைப்பு  குறித்து இரு தரப்பினரும் தற்போது பேசி வருகின்றனர். ஓபிஎஸ் அணியின் சார்பில்  வைக்கப்பட்ட  இரண்டு கோரிக்கைகளை  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது அணிகள்  இணைப்பு குறித்து தீவிரமாக   பேசி வருகின்றனர்.

இந்நிலையில் அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்று ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

அதன்படி சென்னையில் இன்று ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன்  தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதனிடையே டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான வெற்றிவேல் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர், தங்களது ஆதரவு மாவட்ட நிர்வாகிகளுடன்  சென்னையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தொடரும் இந்த  ஆலோசனைக் கூட்டங்களால் பரபரப்பு நிலவிவருகிறது