3 samy handling 3 states in south india
"3 சாமிகள்"...! நாராயணசாமி...பழனிசாமி...குமாரசாமி...அடுத்து யாரு...?
தென்னிந்திய மாநிலத்தை ஆளக்கூடிய மூன்று மாநில முதல்வர்கள் பெயர் சாமி என்ற சொல்லை கொண்டது.
அதன் முறையே....பாண்டிச்சேரி....தமிழ்நாடு....கர்நாடக இந்த மூன்று மாநிலங்களை ஆளக்கூடிய முதல்வர்களான, நாராயணசாமி, பழனிசாமி, குமாரசாமி இவர்களின் பெயர்கள் சொல்லி வைத்தார் போல் சாமி என்ற சொல்லை கொண்டதாக உள்ளது...
மேலும் சமீபத்தில் நடைப்பெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றது.
மஜத 38 இடத்தையும், காங்கிரஸ் 78, மற்றவை 2 என்ற அளவில் இருந்தது.
இதில் பாஜக சார்பாக போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் பெரும்பான்மை நீரூபித்து முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா தனது தற்காலிக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் காங்கிரஸ் மஜத உடன் கூட்டணி வைத்து, குமாரசாமி முதல்வராக பதவி ஏற்றார்.

இந்த இடத்தில் தான் இருக்கு குமாரசாமிக்கு லக்கு. அதிக இடங்களை பிடித்த பாஜக ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை ஆனால்...வெறும் 38 இடங்களை மட்டும் பிடித்த மஜத ஆட்சி பிடித்தது.
தமிழகத்தில்....
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, ஒபிஎஸ் முதல்வராக பதவி ஏற்று பின்னர் அவர் ராஜினாமா செய்த பின்னர், எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றார்.

ஆக மொத்தத்தில் மூன்று சாமிகள் மூன்று மாநிலத்தை ஆள்கின்றனர்.
இதிலிருந்து சாமி பெயருடன் யாராவது முதல்வர் வேட்பாளராக களம் இறங்கினால், அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் லக் உள்ளது என்றே கருதும் நிலை உள்ளது.
