Asianet News TamilAsianet News Tamil

ஆட்சியை காப்பாற்ற அதிமுக மாபெரும் சதி... அம்பலமானதால் ஆத்திரத்தில் திமுக..!

வேலூர் அருகே திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமானது சிமெண்ட் குடோனில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து வேலூர் மக்களவை மற்றும் அதில் உள்ளடக்கிய குடியாத்தம், ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

3 constituencies election cancel... edappadi planisamy plan
Author
Tamil Nadu, First Published Apr 4, 2019, 1:29 PM IST

வேலூர் அருகே திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமானது சிமெண்ட் குடோனில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து வேலூர் மக்களவை மற்றும் அதில் உள்ளடக்கிய குடியாத்தம், ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீடு கல்லூரி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சனிக்கிழமை சோதனை முடிவுற்ற நிலையில் துரைமுருகன் வீட்டிலிருந்து பத்து லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் திமுகவின் தேர்தல் வியூகம் தொடர்பான முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் அள்ளிச் சென்றதாக கூறப்பட்டது. 3 constituencies election cancel... edappadi planisamy plan

இதனையடுத்து கைப்பற்ற ஆவணங்கள் அடிப்படையில் துரைமுருகனின் உதவியாளர் அஸ்கர் அலி, பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான சிமென்ட் கிடங்கில் சோதனை நடத்தப்பட்டது. அந்த குடோனில் சாக்கு மூட்டைகள், அட்டைப் பெட்டிகள், துணிப் பைகள் ஆகியவற்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11.48 கோடி பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 3 constituencies election cancel... edappadi planisamy plan

இது தொடர்பாக திமுக தலைவர் பிரச்சாரத்தின் போது வேலூர் மக்களவை தொகுதி தேர்தலையும் இரண்டு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலையும் நிறுத்த சதி நடைபெறுகிறது என்ற பகீர் தகவலை கூறினார். மேலும் தேர்தலை ரத்து செய்யவே வருமான வரித்துறையினர் திட்டமிட்டே சோதனை நடத்துகின்றனர் என குற்றம்சாட்டியுள்ளார். 3 constituencies election cancel... edappadi planisamy plan

இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனைக்கு பிறகு மத்திய உளவுத்துறை எடுத்துள்ள 'சர்வே' முடிவில் திமுகவுக்கு 18 மக்களவை தொகுதியும், அதிமுகவுக்கு 13 தொகுதிகளும், அமமுகவுக்கு 3 தொகுதிகளும் கிடைக்கலாம். 6 தொகுதிகள் கடும் போட்டி நிலவுவதாக தெரியவந்துள்ளது. மேலும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு 5 தொகுதிகளிலும், அமமுகவுக்கு 4 தொகுதிகளிலும், திமுகவுக்கு 9 தொகுதிகளில் கைப்பற்றும் என்று கூறப்படுகிறது. 3 constituencies election cancel... edappadi planisamy plan

முதல்வர் எடப்பாடி அரசை காப்பாற்றி, தி.மு.க.வின் இடைத்தேர்தல் வெற்றியை தடுக்க வேண்டும் என நோக்கில் மத்திய - மாநில அரசுகள் செயல்பட்டு வருவதாக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios