கட்சியின் 26வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தாயகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொண்டர்கள் மிகக் குறைந்த அளவே கலந்து கொண்டதால் வைகோ மிகுந்த வருத்தமடைந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவிலிருந்து பிரிந்து 26 ஆண்டுகளுக்கு முன்பு திமுக எனும் கட்சியைத் துவக்கினார் வைகோ. அப்போது அதிமுக மதிமுக இடையேதான் இனி அரசியல் திமுகவிற்கு வேலையே இல்லை என்று பேசும் அளவிற்கு வைகோவிற்கு தொண்டர்கள் பலமும் மக்கள் செல்வாக்கும் இருந்தது. வைகோ செல்லும் இடமெல்லாம் மக்கள் திரண்டனர். வைகோவை சுற்றி எப்போதும் ஆயிரம் பேர் இறந்தனர்.

காங்கிரஸ் கட்சி முதல் அப்போது மத்தியில் முக்கியமாக இருந்த அனைத்து கட்சிகளும் வைகோவுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டினார். திமுகவிலிருந்து கூட தினமும் ஒரு முக்கிய நிர்வாகிகள் விலகி வைகோவுடன் இணைந்தனர். 1998 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. போய் கோவில் கட்சியும் பத்தோடு ஒன்று என்கிற நிலைக்கு தள்ளப்பட்டது.

இப்படியாக 26 ஆண்டுகள் ஓடிய நிலையில் நேற்று தனது கட்சியின் துவக்க விழாவை தாயகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடினர் வைகோ. இதற்காக காலையிலேயே வைக்க வந்துவிட்ட நிலையில் தாயகத்தில் நிர்வாகிகள் மட்டுமே இருந்தனர். ஏன் தொண்டர்கள் யாரும் வரவில்லையா என்று நா தழுதழுக்க வைகோ நிர்வாகிகளிடம் கேட்க அதிர்ந்து போன மல்லை சத்தியா உள்ளிட்டோர் உடனடியாக தொண்டர்களை வரவழைக்க ஏற்பாடு செய்தனர்.

இதன் பிறகே மதிமுக கொடியை உற்சாகமாக ஏற்றிவைத்து இனிப்பு வழங்கி விட்டு சென்றார் வைகோ. 26 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்த ஒரு மனிதன் இப்படி ஆகிவிட்டாரே என்று அவரது தொண்டர்கள் கூட முகத்தில் கவலை தோய்ந்த நிலையில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.