Asianet News TamilAsianet News Tamil

துரைமுருகனை தொடர்ந்து டி.டி.வி அணிக்கும் குறி... வருமான வரித்துறை அதிரடி சோதனை..!

முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க. தருமபுரி எம்பி தொகுதி வேட்பாளருமான பழனியப்பனின் உறவினர் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் 25 லட்ச ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
 

25 lakh in the house of ammk candidate palaniappans relatives
Author
Tamil Nadu, First Published Apr 5, 2019, 12:28 PM IST

முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க. தருமபுரி எம்பி தொகுதி வேட்பாளருமான பழனியப்பனின் உறவினர் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் 25 லட்ச ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.25 lakh in the house of ammk candidate palaniappans relatives

தருமபுரி அருகே முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் உறவினர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.25 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எக்காண்ட அள்ளி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் பொல்லியப்பன். தருமபுரி அமமுக வேட்பாளரான பழனியப்பனில் உறவினரான  பொல்லியப்பன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். 25 lakh in the house of ammk candidate palaniappans relatives

நேற்றிரவு 10.30 மணியளவில் சோதனையை தொடங்கிய அதிகாரிகள் இன்று அதிகாலை 4 மணி வரை சோதனையை நடத்தியுள்ளனர். இதில் கணக்கில் வராத சுமார் ரூ.25 லட்சம் பணத்தை வருமானவரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருப்பதாக பொல்லியப்பன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஆவணங்களை கொடுத்து பணத்தை பெற்று செல்லுமாறு வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 25 lakh in the house of ammk candidate palaniappans relatives

இதேபோல, எக்காண்டஅள்ளி கிராமத்தில் செல்லப்பன் என்ற திமுக பிரமுகர் வீட்டிலும், கும்மனூரில் நடராஜன் என்ற திமுக பிரமுகர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதில் கணக்கில் வராத பணம் ஏதும் பிடிபடாததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios