மக்களவை தேர்ததோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்றால் தமிழகம் முழுவதும் உள்ள மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

வருகிற மக்களவை தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த வேண்டாம் என தனது தூதுவர்கள் மூலம் பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மீண்டும் தள்ளி போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து அக்கட்சியுடன் கூட்டணி வைக்க அதிமுக தயாராகிவிட்டது. 
 
தமிழகத்தில் 18 எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்பட்டு 6 மாதங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் பதவி பறிக்கப்பட்டு 15 மாதங்கள் ஆகிறது. இதுவரை தேர்தலை நடத்தவில்லலை. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடிக்கு ஆதரவாக ஓட்டு போட்ட 18 எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்பட்டது. 

 

ஆனால், முதலமைச்சராக எடப்பாடி இருக்கக்கூடாது என்று எதிர்த்து ஓட்டு போட்ட 11 பதவிகளில் இருந்து வருகின்றனர். ஆதரித்து ஓட்டு போட்டவர்களே பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். எதிர்த்து ஓட்டு போட்டவர்கள் பதவி இருக்குமா என்று கேள்வி எழுப்பினார். உச்சநீதிமன்ற தீர்ப்பில் கண்டிப்பாக 11 எம்எல்ஏக்கள் பறிக்கப்பட்டு தமிழகத்தில் ஆட்சி கவிழும் என்றார். மேலும் மத்தியில் பாஜக ஆட்சி அகற்றப்படும், நாம் விரும்பும் ஆட்சி மத்தியில் அமையும் என்று கூறினார். 

ஒசூர் எம்எல்ஏ தகுதி நீக்கம் பற்றி சபாநாயகர், தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம் என்றார். 21 தொகுதி சட்டப்பேரவை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என பிரதமரிடம் அதிமுக கோரிக்கை விடுத்து உள்ளது. மக்களவை தேர்தலோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்றால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.