Asianet News TamilAsianet News Tamil

2024 நாடாளுமன்ற தேர்தல்.. மம்தா வடிவில் இந்தியா மாற்றத்தை எதிர்பார்க்கிறது.. அனல் பறக்க வைத்த எம்எல்ஏ.!

தற்போதைய நிலையில் மம்தா பானர்ஜியின் வடிவத்தில் நாடு மாற்றத்தை எதிர்பார்க்கிறது என்று கோவா எம்.எல்.ஏ ஒருவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். 
 

2024 Parliamentary Election.. India expects change in the form of Mamata .. Goa MLA says.!
Author
Goa, First Published Oct 13, 2021, 10:02 PM IST

2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து குழப்பங்கள் நிலவி வருவதால், மம்தா பானர்ஜி தலைமையில் தேசிய அளவில் அணி அமைக்கும் முயற்சியில் அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்க இறங்கியுள்ளனர். இதுதொடர்பாக தங்கள் விருப்பத்தை திரிணாமுல் காங்கிரஸார் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள்.2024 Parliamentary Election.. India expects change in the form of Mamata .. Goa MLA says.!
 இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கோவாவைச் சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ. கோன்கர் பேட்டி அளித்திருக்கிறார். “கடந்த 5 ஆண்டுகளில் கோவாவில் பாஜக, மக்கள் விரோதக் கொள்கைகளைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. பாஜக ஆட்சியில் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். மேற்கு வங்காளத்தில் பாஜகவை மம்தா எப்படி எதிர்த்துப் போராடினார் என்பதை நாமெல்லாம் பார்த்தோம். தற்போதைய நிலையில் மம்தா பானர்ஜியின் வடிவத்தில் நாடு மாற்றத்தை எதிர்பார்க்கிறது” என்று கோன்கர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios