2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கு காரணம் மூன்று பேர்தான் என்கிற அதிர்ச்சித் தகவல் வருமான வரித்துறை ஆவணம் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் சுமார் 134 தொகுதிகளை வென்று ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜர் எம்ஜிஆருக்குப் பிறகு ஒரே கட்சி தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஆட்சி அமைப்பது அப்போதுதான் என்று பெருமையாக பேசப்பட்டது. அதிமுக அரசு மீது பெரும் அதிருப்தி நிலவிய நிலையிலும் ஜெயலலிதா செய்ததற்கு காரணம் அவரது வியூகம் தான் என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்பட்டது. 

ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சேகர் ரெட்டி எனும் தொழில் அதிபரின் எஸ்ஆர்எஸ் மைனிங் நிறுவனத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை 2016 தேர்தலில் அதிமுக எப்படி வெற்றி பெற்றது என்கிறார் திடுக்கிடும் தகவலை கூறுவதாக அமைந்தது. எஸ்ஆர்எஸ் மைனிங் நிறுவனத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது ஏராளமான ஆவணங்கள் கிடைத்தன. அதில் மிக முக்கியமான ஆவணம் மூன்று அமைச்சர்கள் இடமிருந்து சேகர் ரெட்டி தளத்திற்கு வந்த சுமார் 641 கோடி ரூபாயை பற்றியது.

எஸ்ஆர்எஸ் மைனிங் நிறுவனத்தில் கிடைத்த ஆவணங்களின்படி அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சரான ஓ பன்னீர்செல்வம் சுமார் 217 கோடி ரூபாயை சேகர் ரெட்டிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதேபோல் அப்போது வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த ஆர் வைத்திலிங்கம் சுமார் 127 கோடி ரூபாயை சேகர் ரெட்டி தரப்புக்கு கொடுத்துள்ளார். இதேபோல் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன் 197 கோடி ரூபாயை சேகர் ரெட்டியின் எஸ்ஆர்எஸ் மைனிங் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறாக கிடைக்கப்பட்ட 641 கோடி ரூபாயை எஸ்ஆர்எஸ் மைனிங் நிறுவனத்தின் அதிபர் சேகர் ரெட்டி தன்னுடைய பணியாளர்கள் மற்றும் தனக்கு நெருக்கமானவர்கள் மூலமாக அனைத்து தொகுதிகளுக்கும் இழுத்து அனுப்பி ஒவ்வொரு தொகுதியில் உள்ள சுமார் 70 விழுக்காடு வாக்காளர்களுக்கு தலா 250 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களை கைப்பற்றி அப்போதே வருமானவரித்துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள வருமான வரித்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளனர். ஆனால் அதன் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்பதால் தற்போது இந்த ஆவணங்கள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.