ஊரடங்கை நீட்டிக்கும் பிரதமர் மோடியின் முடிவு சரியானது என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் அனைத்து மாநில முதல்வர்களும் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்தாலோசித்தனர். தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவை வரும் செவ்வாய்க்கிழமையுடன் தளர்த்த வேண்டுமா அல்லது நீட்டிக்க வேண்டுமா, வேறு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியிடம் கூறியதாவது, மாநிலங்களே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தால், அது எந்த பலனையும் தராது. அதனால், நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’பிரதமர் மோடி மேலும் இரண்டு வாரங்கள் ஊடரங்கு உத்தரவு முடிவு எடுத்தது சரியான முடிவு. வளர்ந்த நாடுகளை விட இந்தியா கொரோனாவை சிறப்பாக எதிர்க்கொண்டு பெரும் பேரிழப்பு ஏற்படாமலிருக்க முன்கூட்டியே இந்தியாவில் ஊரடங்கு போடப்பட்டதால் தான் இப்போது ஓரளவு கட்டுப்படுத்த முடிந்துள்ளது.வளர்ந்த நாடுகளை விட இந்தியா எடுத்த நடவடிக்கை சிறப்பானது. ஊரடங்கை தொடராவிட்டால் இதுவரை எடுத்த நடவடிக்கை வீணாகி விடும். நிலைமை கட்டுக்குள் வைக்க ஊரடங்கு நீட்டிப்பு அவசியம் ’’என அவர் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.