2 samman has sent govt doctors by jayalalitha investigation team

ஜெ மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கைரேகை தொடர்பாக திமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் நேரில் சென்று விளக்கம் அளித்தார்.

இதற்கு அடுத்தபடியாக இரண்டு அரசு மருத்துவர்களுக்கு தற்போது சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

அரசு அதிகாரிகளாக உள்ள இரண்டு மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப் பட்டு உள்ளதாகவும்,அந்த இரண்டு நபர் யார் என்பதை தற்போது வெளியில் சொல்ல இயலாது என்றும் நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்

மருத்துவர்கள் பெயர் வெளியிடாததற்கு நீதிபதி ஆறுமுகசாமி சொன்ன காரணம் என்ன தெரியுமா ?

இரண்டு அரசு மருத்துவர்களும் நேரில் வரலாம்,வராமலும் போகலாம் ஆனால் யாரையெல்லாம் விசாரிக்க வேண்டுமோ அவர்களை கட்டாயம் விசாரணை ஆணையம் விசாரிக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.

இந்த இரண்டு மருத்துவர்களும் நாளை விசாரணைக்கு வரவேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்

இதுவரை 10 பிரமான பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என்றும்,மேலும் யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் பிரமான பத்திரங்களை தாக்கல் செய்யலாம் எனவும் விசாரணை ஆணையம் தெரிவித்து உள்ளது