நடந்து முடிந்த தேர்தலில் பிஜேபி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆனால் தமிழகம் மற்றும் கேரளாவில் படு தோல்வியை சந்தித்துள்ளது. இதில் தமிழகத்தைப் பொறுத்தவரை பிஜேபி அதிமுக கூட்டணி தேனி தொகுதியைத் தவிர மொத்த தொகுதிகளையும் இழந்துள்ளது.  அதிமுகவின் 19 வேட்பாளர்களில் மிக குறைந்த ஓட்டு கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை வாங்கியது தெரியவந்துள்ளது. அமைச்சர்கள் வெற்றி பெற்ற சட்டசபை தொகுதிகளிலும், அதிமுகவுக்கு குறைந்த ஓட்டுகளே கிடைத்துள்ளதால், அதிமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 39 இடங்களில் போட்டியிட்டன. இதில் வேலூர் தொகுதி மட்டும் தேர்தல் நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 38 இடங்களில் அதிமுக மட்டும் 19 இடங்களில் போட்டியிட்டு, தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளரும் ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். கூட்டணி கட்சிகள்  போட்டியிட்ட 19 இடங்களிலும் படு தோல்வி அடைந்தது.

இதில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட 17 தொகுதிகளிலும் குறைந்தபட்சமாக 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வாங்கி தோல்வி அடைந்துள்ளனர். ஆனால், துணை சபாநாயகரும்,  கரூர் தொகுதியில் வேட்பாளர் தம்பிதுரை 2,75,151  வாக்குகள் வாங்கி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் படு தோல்வி அடைந்தார். ஜோதிமணி வித்தியாசம் 4,20,546 வித்தியாசத்தில் 6,95,697 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி  ஆகும். அதன்படி, அதிமுக வேட்பாளர்களிலேயே குறைந்த அளவு  ஓட்டு பெற்றது தம்பிதுரைதான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

கரூர் லோக்சபா தொகுதியில், கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர், மணப்பாறை, விராலிமலை ஆகிய, 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில், கரூரில் வெற்றி பெற்ற, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலையில் வெற்றிபெற்ற சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அதுமட்டுமல்ல வேடச்சந்தூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளும், அதிமுக வசம் உள்ளன. 

இப்படி அதிமுக கைவசமுள்ளள அமைச்சர்களின்  தொகுதிகளில், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை விட குறைந்த ஓட்டுகளே தம்பிதுரைக்கு கிடைத்துள்ளன. வேடச்சந்தூர் தொகுதியில், தம்பிதுரைக்கு, வெறும் 55,258 ஓட்டுகள், ஆனால் ஜோதிமணிக்கு, 1,18072 ஓட்டுகள் கிடைத்துள்ளன. அடுத்ததாக அரவக்குறிச்சி தொகுதியில், தம்பிதுரைக்கு, வெறும் 37,518 ஓட்டுகள் வாங்கியுள்ளார், ஆனால் ஜோதிமணிக்கு, 1,12,667 ஓட்டுகள், அடுத்ததாக கரூர் தொகுதியில் தம்பிதுரைக்கு, 48,616 ஓட்டுகள், ஆனால் ஜோதிமணிக்கு, 1,11,333 ஓட்டுகள் கிடைத்துள்ளன.

இதுபோக கிருஷ்ணராயபுரம் தொகுதியில், தம்பிதுரைக்கு, 44,315 ஓட்டுகள், ஆனால் ஜோதிமணிக்கு, 1,10533 ஓட்டுகள், அடுத்து மணப்பாறை தொகுதியில் தம்பிதுரைக்கு, 48,644 ஓட்டுகள், ஆனால் ஜோதிமணிக்கு, 1,32, 651 ஓட்டுகள், கடைசியாக உள்ள விராலிமலையில் தம்பிதுரைக்கு, 40104 ஓட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளது ஆனால், ஜோதிமணிக்கு 10,6,352 ஓட்டுகள் கிடைத்துள்ளன. 

இதில் அதிரவைத்த தகவல் என்னன்னா? போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியான கரூர் தொகுதியில், ஜோதிமணிக்கு 62717 ஓட்டுகளும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலையில், 66248 ஓட்டுகளும், தம்பிதுரை குறைவாக பெற்றுள்ளார். துணை சபாவாக இருந்த தம்பிதுரைக்கே இந்த நிலைமைன்னா என்னத்த சொல்றது என அதிமுகவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.