இந்த அமைப்புகள் 6 ஆண்டுகளாக ஏராளமானட முறை அறிவுறுத்தியும் தங்களது கணக்குகளைத் தாக்கல் செய்யவில்லை என்பதால் இந்த அமைப்புகளின் எஃப்சிஆர்ஏ பதிவு ஏன் ரத்து செய்யப்பட்டது.

2014-ல் நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்தது முதல் மத்திய உள்துறை அமைச்சகம் சுமார் 14,800 என்.ஜி.ஓ.க்களின் எப்.சி.ஆர்.ஏ. உரிமங்களை ரத்து செய்துள்ளது.
 “எஃப்சிஆர்ஏ பதிவு ரத்து செய்யப்படுவதையடுத்து அனைத்து என்.ஜி.ஓ.க்கள் மற்றும் கல்வி அமைப்புகள் அயல்நாட்டு நிதிபெறுவதிலிருந்து தடை செய்யப்படுகின்றனர்” என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எஃப்.சி.ஆர்.ஏ வழிகாட்டுதலின்படி பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் ஆன்லைனில் வருவாய்-செலவு கணக்கு அறிக்கை, பணவரவு, செலுத்துதல், மற்றும் இருப்புநிலைக் குறிப்பு ஆகியவற்றைத் தாக்கல் செய்ய வேண்டும். 

ஒவ்வொரு நிதியாண்டு முடிந்த பின்பும் 9 மாதங்களில் இவர்கள் இந்த விவரங்களைச் சமர்ப்பித்தாக வேண்டும்.அயல்நாட்டு நிதியை ஒரு குறிப்பிட்ட ஆண்டில் பெறாத அமைப்புஅக்ளும் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்கிறது எஃப்.சி.ஆர்.ஏ. வழிகாட்டுதல்கள்.

தற்போது பதிவு ரத்து செய்யப்பட்ட அமைப்புகளில் மேற்கு வங்க நுரையீரல் மருத்துவ ஆய்வு கழகம், தெலங்கானாவில் உள்ள தேசிய ஜியோபிசிக்கல் ஆய்வுக் கழகம், மகாராஷ்டிராவில் உள்ள தேசிய வைராலஜி கழகம், மேற்கு வங்கத்தில் உள்ள தாகூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி அமைப்பு, மஹாராஷ்ட்ராவில் உள்ள பேப்டிஸ்ட் கிறிஸ்டியன் அசோசியேஷன் ஆகிய அமைப்புகள் அடங்கும்.

அயல்நாட்டு பங்களிப்பு (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ராஜஸ்தான் பல்கலைக் கழகம், அலஹாபாத் வேளாண் கழகம், யங் மென்ஸ் கிறிஸ்டியன் அசோசியேஷன், குஜராத் அண்ட் ஸ்வாமி விவேகானந்தா கல்வி அறக்கட்டளை, கர்நாடகா ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.1,807 அமைப்புகளுடன் பெங்களூருவில் உள்ள இன்போசிஸ் என்.ஜி.ஓ. அறக்கட்டளையின் பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.