Asianet News TamilAsianet News Tamil

இடைத்தேர்தலில் இறங்கியடிக்கத் தயாரான கமல்... சூடுபிடிக்கும் அரசியல் களம்..!

தமிழகத்தில் நடைபெற உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

18 by-election...kamalhassan party to contest
Author
Tamil Nadu, First Published Mar 14, 2019, 1:53 PM IST

தமிழகத்தில் நடைபெற உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதே நாளில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்க உள்ளது. மொத்தம் உள்ள 21 காலி இடங்களில் 18 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடக்கிறது. 3 இடங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அங்கு தேர்தல் நடக்கவில்லை. 18 by-election...kamalhassan party to contest

இந்நிலையில் ஏற்கனவே மக்களவை தொகுதியில் தனித்து போட்டியிடப்போவதாகவும் கமல் அறிவித்திருந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 1300-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். கட்சி அலுவலகத்தில் 4-வது நாளாக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக நேர்காணலும் நடைபெற்று வருகிறது. 18 by-election...kamalhassan party to contest

இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறம் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை இன்று முதல் பெறலாம், மேலும் மனுக்களை விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios