தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 3ம் தேதி தொடங்கி மே 21ம் தேதி முடிவடைகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 3ம் தேதி தொடங்கி மே 21ம் தேதி முடிவடைகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால், பள்ளிகளில் ஒன்பது முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட்டு, பாடங்கள் முடிக்கப் படுகின்றன. செய்முறை வகுப்புகளும், வாரத்தில் இரண்டு நாட்கள் நடத்தப்படுகின்றன. இதையடுத்து, பொதுத்தேர்வை நடத்துவதற்கான கால அட்டவணையை, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வுக்கான அட்டவணை
மே 3ம் தேதி தமிழ்பாடம்
மே 5ம் தேதி ஆங்கிலம்
மே 7ம் தேதி கணினி அறிவியல், உயிரி அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் தேர்வுகள்
மே 11ம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்
மே 17ம் தேதி கணிதம், விலங்கியல், வேளாண் அறிவியல், நர்சிங், ஆடை வடிவமைப்பு
மே 19ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு
மே 21ம் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் உள்ளிட்ட தேர்வுகளும் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
