Asianet News TamilAsianet News Tamil

12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த மே 7ம் தேதி ஆட்சிக்கு வந்தது. அன்று முதல் தற்போது வரை முக்கிய மற்றும் உயர் பொறுப்பில் இருக்கும் பல அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்கள் முதல், நகராட்சி ஆணையர்கள் வரை என அனைத்து தரப்பினரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில், தற்போது 12 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

12 IPS officers transferred
Author
Tamil Nadu, First Published Nov 18, 2021, 5:35 PM IST

தமிழகத்தில் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர், வேலூர் மாவட்ட எஸ்.பி. உள்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த மே 7ம் தேதி ஆட்சிக்கு வந்தது. அன்று முதல் தற்போது வரை முக்கிய மற்றும் உயர் பொறுப்பில் இருக்கும் பல அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்கள் முதல், நகராட்சி ஆணையர்கள் வரை என அனைத்து தரப்பினரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில், தற்போது 12 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் விவரம்;-

* சென்னை சட்டம் ஒழுங்கு (கிழக்கு) இணை ஆணையர் ராஜேந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை போக்குவரத்து காவல் (தெற்கு)இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*  சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் (தெற்கு) செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை பணியமைப்பு பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

*  சென்னை புளியந்தோப்பு துணை ஆணையர் ராஜேஷ் கண்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு வேலூர் மாவட்ட எஸ்.பி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

*  லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் வித்யா குல்கர்னி அயல்பணியாக சிபிஐக்கு சென்றதால் கோவை காவல் ஆணையராக பதவி வைக்கும் தீபக் எம் தாமோர் இடமாற்றம் செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்

*  சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சதீஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு கோவை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*  சென்னை நிர்வாக பிரிவு ஏஐஜி பி.சரவணன் இடமாற்றம் செய்யப்பட்டு நெல்லை மாவட்ட எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

*  பணியமைப்பு பிரிவு டிஐஜி பிரபாகரன் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை சட்டம் ஒழுங்கு (கிழக்கு) இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 

*  திருச்சி மாவட்ட எஸ்.பி, பா.மூர்த்தி இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை, சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

*  போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை எஸ்.பி, சுஜித்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு திருச்சி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* நெல்லை மாவட்ட எஸ்.பி, மணிவண்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 

*  வேலூர் மாவட்ட எஸ்.பி, செல்வகுமார் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை நிர்வாகப் பிரிவு ஏஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* அயல் பணியில் இருந்து தமிழகம் திரும்பிய எஸ்.பி, ரம்யா பாரதி சென்னை சைபர் அரங்கம் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி ஐஜி பதவியிலிருந்து எஸ்பி பதவிக்கு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் இவர் கூடுதலாக செயலாக்கம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பணிகளையும் கவனிப்பார்.

Follow Us:
Download App:
  • android
  • ios