Asianet News TamilAsianet News Tamil

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... 100 சதவிகிதம் தேர்ச்சி..!

கொரோனாவால் தேர்வு ரத்தான நிலையில், காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10th class exam results ... 100 percent pass
Author
Tamil Nadu, First Published Aug 10, 2020, 10:02 AM IST

கொரோனாவால் தேர்வு ரத்தான நிலையில், காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச்- 27ம் தேதி நடக்கவிருந்த தேர்வு, கொரோனா பிரச்னையால் ரத்து செய்யப்பட்டது. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாகவும், காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்ணை கணக்கிட்டு, தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்தது.10th class exam results ... 100 percent pass

அதன்படி, 10ம் வகுப்பு மதிப்பெண் விபரம், இன்று காலை, 9:30 மணிக்கு வெளியானது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற, இணையதளங்களில் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கும், தேர்வு முடிவு அனுப்பப்பட்டது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், வரும், 17 முதல், 21 வரை, பள்ளிகளில் வழங்கப்படும். மறுகூட்டல் கிடையாது என்பதால், மதிப்பெண் தொடர்பான புகார்களை, தலைமை ஆசிரியர்களிடம் தெரிவிக்கலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios